ஒரு சுட்டி சிறுவன் செய்த இந்த காரியத்தைப்பாருங்க!

பாபு ஒரு படுச்சுட்டியான சிறுவன். வீட்டில் இருப்பதை விரும்பாத அவன் வெளியே சுற்றிப்பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவன் வீட்டிற்கு அருகே ஒரு உடற்பயிற்சிக்கூடம் ஒன்று உள்ளது. தினமும் அதன் ஜன்னலில் நின்று உள்ளே பயிற்சிசெய்யும் நபர்களை வேடிக்கை பார்ப்பான். ஒருநாள் அவன் பார்க்கும் போது அங்கே ஒருநபர் மிகுந்த எடையுள்ள ஒரு இரும்பை தூக்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்தவுடன் பாபுவுக்கு ஆசை வந்துவிட்டது. உடனே வேகமாக ரோட்டுக்கு ஓடி, அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லை தூக்க முயற்சித்தான். அந்தக்கல் அவனைவிட பெரியதாக இருந்ததால் அவனால் அதை தூக்க முடியவில்லை. சோர்வுற்ற அவன் விடாமல் முயற்சித்துக்கொண்டிருந்தான். அந்த நேரம் உள்ளே இரும்பை தூக்கிக்கொண்டிருந்த அந்த நபர் அவ்வழியே வந்தார். அவர் பாபுவின் முயற்சியை கண்டு அவனிடம் போய், தம்பி நான் இந்த இரும்பை தூக்கினது உண்மை தான். ஆனால் முதலில் சிறு சிறு எடைக்கொண்ட இரும்பைத் தூக்கினேன், அதிக உடற்பயிற்சிகள் செய்து என் உடலை வலுப்படுத்திக்கொண்டேன். அந்த உடற்பயிற்சியினால் ஏற்பட்ட பெலத்தோடு இப்போது பெரிய எடையுள்ள இரும்பை தூக்குகிறேன் என்று சொன்னார். உடற்பயிற்சி போன்ற அந்த சிறியவற்றில் செய்த விடாமுயற்சியே இன்று என்னை பெரியவற்றை செய்து சாதிக்கவைத்துள்ளது என்றார்.

இதுதான் உண்மை. பலநேரம் பல சாதனையாளர்களை பார்த்து அவர்களை போல் ஆக வேண்டும் என சில காரியங்களில் முயற்சிக்கின்றோம். பல பெரியகாரியங்களை நம் குடும்பத்தில், நாம் வேலைபார்க்கும் இடத்தில், நாம் படிக்கும் பள்ளி கல்லூரியில் செய்ய ஆர்வமுடன் இருக்கிறோம். ஆனால் தோல்விகளை சந்திக்கநேரிடும் நேரத்தில் சோர்ந்து போகின்றோம். சாதனையாளர்களின் வெற்றியை பார்ப்பதை விட அவர்கள் கடந்துவந்த பாதைகளை நாம் பார்க்கும்பொழுது நாமும் பலவிதங்களில் பக்குவப்படுபடுவோம் என்பது தான் உண்மை.

வாழ்க்கையில் எந்த ஒரு பெரியக்காரியத்தையும் செய்ய முயலும்போது, நம் விசுவாசம் ஆண்டவரின்மேல் எப்படி உள்ளது என்று சோதிக்கவேண்டும். என்ன நேரிட்டாலும் சோர்ந்து போகாத அளவிற்கு நமக்குள் விசுவாசத்தை வளர்க்க வேண்டும். அந்த மனிதன் உடற்பயிற்சிக்கூடத்தில் தன் உடல் பெலத்தை வளர்த்துக்கொண்டதுபோல, நாமும் ஜெபத்தில் தரித்திருந்து விசுவாசத்தில் வளரும்போது, வயது ஒரு தடையில்லை குடும்பசூழல் ஒரு தடையில்லை படிப்பு அந்தஸ்து ஒரு தடையில்லை நாமும் ஜெயிக்கமுடியும். நாம் ஜெபத்தில் தரித்திருக்கும்பொழுது வேதத்தில் கூறப்பட்டுள்ளது,”உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு” என. ஆகவே ஜெபத்தில் தரித்திருந்து விசுவாசத்தின் அளவைக்கூட்டி, தேவனுடைய பெலத்தினால் நாம் நிற்போம் ஜெயிப்போம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE