ஆராதனை என்றால் என்ன?

“ஜெபம் என்பது நாம் தேவனிடம் கேட்பதாகும். ஆராதனையோ.. நாம் அவருக்குக் கொடுப்பதாகும்” என்கிறார் பக்தர் ஒருவர். ..தமிழ் வேதாகமத்திலே துதித்தல் என்கிறோம். வேதாகமம் கிரேக்க எபிரெய பாஷைகளில் எழுதப்பட்டது. அதிலிருந்து தான் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. மூலபாஷைகளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.தமிழ் மொழி பெயர்ப்பிலோ துதி என்று மட்டும் வந்துவிட்டது. ஒரு சில மூலபாஷையின் சொற்களைப் புரிந்து கொண்டால் ஆராதனையின் பொருள் சரியாய்ப் புரிந்து விடும்.

1. Halal, “ஹலல்” எபிரெயச்சொல் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வாய்விட்டுத் துதிப்பது.
2. Shabach, “ஷபாக்” பலத்த சத்தத்தோடு துதித்தல்
3. Yadah,”யாடா” பணிந்து குனிந்து துதிப்பது
4. Towdah,”டௌடா” கைகளை உயர்த்தி ஆராதிப்பது
5. Doxa “டாக்ஸா” நடனத்துடன் துதிப்பது.

அன்புக்குரியவர்களே! ஜெபிக்கக் கற்றுக் கொண்டோர் ஆராதிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால் பரிதாபம் தான், மனுகொடுப்பது போல ஜெபம் அமையாமல் அவரோடு உறவாடி மகிழ்ந்து ஆராதிப்பது உச்சிதமானது. ஈடு இணையற்றது. ஜெபிக்கக் கற்றுக் கொண்ட நீங்கள் ஆராதிக்கவும் கற்றுக் கொண்டால் பாக்கியசாலிகள் தான்.

“அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து” சங் 100:4

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE