ஆயத்தம்

ஒரு நடமாடும் வியாபாரி, தன்னுடைய வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள் வழி தவறிவிட்டான். ஒரு இடுக்கமான கிளைச் சாலை வழியாக நெடுந்தூரம் சென்றபின், ஒரு வயதான விவசாயி பாழடைந்த ஒரு வீட்டுக்கு முன்பாக உட்கார்ந்திருப்பத்தைக் கண்டான். அவன் பார்ப்பதற்கு முரட்டுத்தனமானவனாகக் காணப்பட்டான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன. கால்களில் பாதரட்சை இல்லை. அந்த வியாபாரி அவனிடம் தான் பிரதான சாலையைச் சென்றடைய எவ்வழியாகச் செல்லவேண்டும் என்று விசாரித்தறிந்தான். பின்னர் அந்த விவசாயிடம் பேச்சுக் கொடுக்க விரும்பி “ஐயா, இந்த ஆண்டு உங்கள் பருத்தி விவசாயம் எப்படி இருந்தது?” என்று கேட்டான். அதற்கு அந்த விவசாயி பருத்திப் பயிருக்கு வரும் ஒரு நோய்க்குப் பயந்து நான் பருத்தியே பயிரிடவில்லை என்றான். பின்னர் அந்த வியாபாரி “அப்படியானால் உங்கள் தானியப் பயிர்கள் எப்படி இருக்கின்றன? என்று கேட்டான். அந்த விவசாயி, “நான் எந்தவொரு தானியமும் பயிரிடவில்லை. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், ஆதலால் பயிர்கள் காய்ந்து போகும் என்று பயந்தேன்” என்றான். அந்த இளைஞன் தொடர்ந்து “உங்கள் உருளைகிழங்கு பயிர் எப்படி இருக்கிறது” இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்குமா?” என்று கேட்டான். அந்த விவசாயி, “நான் உருளைக்கிழங்கு நடவில்லை. அந்தப் பயிருக்கு ஏற்படக்கூடிய ஒரு பூச்சித் தாக்குதலுக்குப் பயந்து உருளை பயிரிடவில்லை” என்றான். “பின் என்னதான் பயிரிட்டீர்கள்” என்று கேட்ட இளைஞனிடம் அந்த விவசாயி, “நான் ஒன்றும் பயிரிடவில்லை. ஒன்றும் செய்யாமலிருப்பதே பாதுகாப்ப என்று நினைத்து இருந்துவிட்டேன்” என்றான்.

சில கிறிஸ்தவர்கள் இவனைப்போலத்தான், ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுக்கிறார்கள். “ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படப்போகிறது. அதற்கு ஆயத்தமாயிருங்கள் என்ற அறிவிப்பைக் கேள்விப்படுகிறார்கள். அதைச் சந்திக்க ஆயத்தப்பட விரும்புகிறார்கள். தங்கள் ஓய்வுகாலத் தேவைகளுக்குப் போதுமான பணம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்து திருப்தியடைகிறார்கள். அது போதுமானதாக என்பது யாருக்குத் தெரியும்? சிலர் மற்றவர்களுக்குக் கொடுத்தால் பின்னால் தங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுமோ என்று உறுதி செய்து கொள்ள விரும்புகிறார்கள்.

சாலொமோன் பிரசங்கி 11:4 இல் “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டன்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்” என்று கூறுகிறார். அதாவது, பிரதிகூலமான சூழ்நிலைகளைக் கருதாமல் உன் ஆகாரங்களைத் தண்ணீர்கள் மேல் போடு. கர்த்தரை விசுவாசித்துத் தண்ணீர்களின் மேல் உன் ஆகாரத்தைப் போட்டுக் காத்திருக்கப் போகிறாயா? அல்லது வரப்போகும்நெருக்கடியான காலத்தைச் சமாளிப்பதற்கென்று உன் ஐசுவரியத்தைப் பதுக்கி வைக்கப் போகிறாயா? நமது ஆண்டவர் பஞ்காலத்திற்கு மாத்திரமல்ல, செழிப்பான காலத்துக்கும் தேவன் அல்லவா?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE