எப்பொழுதும், எல்லாவற்றிலும்!

ஒரு வீட்டின் கூரையின் மேல் ஒருவர் இருந்து, வீட்டைப்பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். வாயில் சில ஆணிகளை வைத்து ஒவ்வொன்றாய் எடுத்து தனது சுத்தியால் கூரையில் அடித்துக்கொண்டிருந்தார். தீடீரென்று அல்லேலூயா! ஸ்தோத்திரம்! என்று சத்தமிட்டார். கீழேயிருந்தவர்கள் என்னவென்று கேட்டபோது, அவர்தான் ஆணிகளில் ஒன்றை விழுங்கிவிட்டதாகச் சொன்னார். “அதற்காவா இந்த ஆர்ப்பாட்டம்? ஆணியை விழுங்கியதற்கும், அல்லேலூயாவிற்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டார்கள். “ஆம் நல்லவேளை நான் சுத்தியலை விழுங்கவில்லையே, சுத்தியலை விழுங்கி இருந்தால் எவ்வளவு அதிகமான ஆபத்திலிருந்திருப்பேன்.ஆகவே தேவனைத் துதிக்கிறேன்” என்றாராம் அந்த விசுவாசி. எப்போழுதும் சந்தோஷமாயிருங்கள்! மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம். துதிப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் ஏதாவது ஒரு காரணத்தை உண்டாக்கியாவது கர்த்தரைத் துதியுங்கள் என்றார் ஒரு பக்தன். “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1தெச. 5:16-18)

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE