இலட்சியம்

“Boys be ambitious for christ “என்ற வாசகம் ஜாப்பானிலே மிகவும் பிரபலம். அந்த வாசகத்துக்குச் சொந்தக்காரர் வில்லியம் ஸ்மித் கிளார்க்(William Smith Clark) என்ற அமெரிக்கர், 1876ல் ஜப்பான் அரசு, பேராசிரியரான வில்லியம் ஸ்மித் கிளார்க் அவர்களை ஹொகைடோ(Hokaido) தீவில் சாப்பாரோ வேளாண்மை கல்லூரியை(Sapparo Agri College) நிர்மாணிப்பதற்காக அயல்தேச ஆலோசகராக நியமித்தது. எட்டே மாதங்களில் சிறப்பாக கல்லூரியை உருவாக்கினார். அத்தோடு மட்டுமல்ல, அத்தீவில் ஒரு நாற்பது இளைஞர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி, இந்த வாலிபர்களைப் பார்த்துதான் வில்லியம் கூறினார்”Boys be ambitious for christ”. இந்த சின்ன வாலிபர் குழு தான் பின்னாட்களில் பெரும் தலைவர்களாக எழும்பி, நவீன ஜப்பானை கட்டமைத்தார்கள். ஆமெரிக்காவின் அணுகுண்டுகளுக்கு ஜாப்பான் இரையானபோது எல்லாம் முடிந்துவிட்டது என்ற இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, வில்லியம் ஸ்மித் கிளார்க்கின் வாசகங்கள் தான் மீண்டும் இளைஞர்களையும் ஜப்பானியர்களையும் தட்டியெழுப்பியது. வாழ்க்கையின் நம்பிக்கையையும், ஓயாது உழைக்கும் வெறியையும் அவர்களுள் தூண்டியது. நவின ஜப்பானில் வேறெதையும் விட விசுவாசக் கூட்டத்தார் திரளாய் எழும்பிப் பிரகாசிக்கிறார்கள். நாள்தோறும் உயரும் விசுவாசிகளின் எண்ணிக்கையினால் அந்த தேசம் ஆசீர்வதிக்கப்படுகின்றது

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE