பதறுகிறவன் சிதறிப் போவான்

ஆகாய விமானத்தில் பைலட்டோடு ஒரு மாணவனும் ஒரு விசுவாசியும் பயணம் செய்தனர். நடுவானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது விமானம் பழுதடைந்தது. இப்போது இரண்டு பாரசூட்தான் இருக்கிறது என்று கேட்ட மாத்திரத்திலே விசுவாசி டக்கென்று ஒரு பாரசூட்டை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விட்டார். தம்பி இருக்கிற ஒரு பாரசூட்டை நீ மாட்டிக் கொண்டு குதி. நீ வாழ வேண்டிய பையன். என்னைக் குறித்து கவலைப்படாமல் குதி என்று பைலட் சொன்னார். “”நாம் இரண்டு பேருமே இப்போது பாரசூட்டில் இறங்கப்போகிறோம். விசுவாசி அவசரத்தில் பாரசூட்டு என்று எண்ணி என் ஸ்கூல் பேக்கை மாட்டிக் கொண்டு குதித்து விட்டார்” என்றான் மாணவன்.
  விசுவாசி என்கிறோம். இன்னும் பதறுகிறவர்களாய் அவசரப் படுகிறவர்களாய் காணப்படுகிறோம். விசுவாசி கிரியை செய்கிறவனாய் இருக்க வேண்டும். ஆனால் பதறுகிறவனாய் காணப்படக் கூடாது. பதறுகிறவன் சிதறிப் போவான்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE