ஆப்பிள் தோட்டம்

தேவ பக்தி மிகுந்த விசுவாயி ஒருவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருடைய குடும்பத்தினர் கர்த்தரிடம் பக்தி கொண்ட விசுவாசிகள். அவர்களுக்கு ஆப்பிள் தோட்டம் ஒன்றுயிருந்தது. அதுதான் அவர்களின் வாழ்வு ஆதாரம். ஒரு நாள் அந்த விவசாய குடும்பத்தின் தலைவர் ஆப்பிள் தோட்டத்தைச் சுற்றி உலா வந்தார். புழுக்கள் ஆப்பிள் பழங்களினுள் நுழைந்து தின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் குடும்பமாக வந்து பழத்திலுள்ள புழுக்களை அப்புறப்படுத்த முயற்சி எடுத்தனர். ஒன்றும் பயன் அளிக்கவில்லை. புழுக்கள் முன்பைவிட அதிகமாயின. மனுஷனால் கூடாதது தேவனால் கூடும் என்று அறிந்திருந்தார்கள். அன்று இரவு முழுவதும் குடும்பமாக போராடி ஜெபித்தார்கள். ஆண்டவர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டார். மறுநாள் அந்தத் தோட்டத்திற்கு பறவைகள் கூட்டம் கூட்டமாக படை எடுத்தன. புழுக்களையெல்லாம் பிடித்துத் தின்றுவிட்டு சென்றுவிட்டன.

நண்பர்களே.. குடும்பங்களில் பிரச்சனைகள் வரும்போது குடும்பமாக கூடி ஜெபிப்பதினால் அற்புதமான பதில் கிடைக்கிறது என்பது மேற்கூறப்பட்ட சம்பவத்திலிருந்து நாம் அறிகிற உண்மை, பிரச்சனைகளுக்காக குடும்பமாக ஜெபிப்பதோடு நில்லாமல் அனுதினமும் குடுப ஜெபத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE