அப்படியே ஆகக்கடவது

ஆதியும் அந்தமுமான அவர் தன்னுடையே பெயரையும் ஆமென் என்று வைத்திருப்பது ஆச்சரியமானது அல்லவா? வெளி.3.14

ஆமென் இந்த வார்த்தை எபிரெய மொழியிலுள்ள ஒரு வார்த்தை. இதன் அர்த்தம் “”அப்படியே ஆகக்கடவது””. வேதத்தை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் ஆமென் என்ற வார்த்தையை பெரும்பாலும் மொழிபெயர்க்காமல் அப்படியே போட்டிருக்கிறார்கள். அமென் வார்த்தையும் அல்லேலூயா என்ற வார்த்தையும் உலகத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகளையெல்லாம் ஒன்றாய் இணைக்கக்கூடியே பொதுவான வார்த்தைகளாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல நாம் ஜெபிக்கிற ஒவ்வொரு ஜெபத்திலும் ஆமென் என்று சொல்லி முடிக்கிறோம். ஒருவர் ஜெபத்தை மற்றொருவர் அமோதிக்கும்போது, அவர் ஜெபித்தபடியே நானும் ஜெபிக்கிறேன் அல்லது அந்த ஜெபத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்பதை வெளிப்படுத்தும்படி நாமும் ஆமென் என்று சொல்லுகிறோம்.

ஆமென் என்ற வார்த்தை வேதத்திலே எழுபத்தெட்டுமுறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அப்.பவுல் ஓவ்வொரு நிருபங்களையும் முடிக்கும்போது ஆமென் என்று சொல்லி முடித்திருக்கிறார்.அப்.யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை முடிக்கும்போது, “ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்”என்று முடித்திருக்கிறார். வேதபுத்தகம் ஆதியிலே என்று ஆரம்பித்து ஆமென் என்று முடிவடைகிறது.வேதத்தில் ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பது நமக்கு பெரிய ஆசீர்வாதமாகும்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE