என்னைப் பார் எனது அழகைப் பார்

அரச மாளிகை ஒன்றில் வலை பின்னும் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தது அந்த சிலந்திப்பூச்சி. அப்போது ஏளனமான சிரிப்பொலி ஒன்று கேட்க திரும்பிப் பார்த்தது சிலந்தி. அங்கு ஏளனமாக சிரித்துக் கொண்டு நின்றிருந்தது ஒரு பட்டுப்பூச்சி. பட்டுப்பூச்சியே நீ ஏன் சிரிக்கிறாய்? என்று வினவியது சிலந்திப்பூச்சி.

ஒன்றுமில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு உன் வலையை பின்னுகிறாயே இதனால் என்ன பயன்? உன் வேலையை ஒருவரும் மெச்சிக் கொள்ளப்போவது இல்லை. மாறாக, அதை தூசி என்று தூற்றத்தான் போகிறார்கள். ஆனால் என்னைப் பார் எனது அழகைப் பார் என்னிலிருக்கும் அழகிய பொன்னிறத்தை பார்
என்னைப் பார்த்து யாராவது அருவருப்பார்களா? … என்று அளந்துக் கொண்டே போனது பட்டுப்பூச்சி.

நண்பா வீண் பெருமைக் கொள்ளாதே பெருமையுள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் என்று வேதம் கூறுகிறது என்றது சிலந்திப்பூச்சி.

ஆனால் பட்டுப்பூச்சியோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பேசிக்கொண்டே போனது. அவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில், அரசனுக்கு பட்டாடை உண்டு பண்ணும் நெசவாளி வந்து அப்பட்டுப்பூச்சியைப் பிடித்து வெண்ணீரில் போட்டான். வீண் பெருமை பேசிய பட்டுப்பூச்சி சடிதியில் மாண்டுப் போனது.

நாம் கூட சில வேளைகளில் மனமேட்டிமை கொண்டவர்களாய் பெருமைக் கொள்கிறோம். ஆனால் அதன் முடிவு இலக்சை என்பதை மறந்துவிடுகிறோம். (நீதி 11:2). தாழ்மையுள்ளவர்களுக்குதேவன் கிருபையளிக்கிறார் என்று வேதம் கூறுகிறது. எனவே தேவக்கிருபையை பெற்றுக் கொள்ள மனத்தாழ்மையுடன் வாழ கற்றுக் கொள்வோம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE