தலையணையில் வேதாகமம்

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் மொழி பெயர்ப்பதற்கு அதோனிராம் ஜட்சன் (Adoniram judson) என்ற மிஷனரிக்கு 20 வருடங்கள் ஆனது. 1824 ஆம் அண்டு, இங்கிலாந்திற்கும், பர்மாவிற்கும் இடையில் நடந்த போரில் அவர் மிஷனரியாக இருந்த காரணத்தால் ஜட்சன் சிறையிலடைக்கப்பட்டார். அவரது மனைவி புதிய ஏற்பாட்டின் மொழி பெயர்ப்பை எடுத்து, தாங்கள் இருந்த குடிசையின் தரையில் புதைத்து வைத்தார்கள். ஆனால் ஈரப்பசையின் காரணமாக, அது பூஷணம் பிடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்ட அவரது மனைவி, அதை எடுத்து, ஒரு பஞ்சில் சுருட்டி அதை ஒரு தலையணை போல செய்து அதை சிறையிலிருக்கும் தன் கணவரிடம் கொண்டுப் போய் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த ஒன்பது மாதங்களில் ஜட்சனை இன்னும் மோசமான சிறையில் அவரை மாற்றினர். அவரோடு இன்னும் நூறு பேரை அடுத்த நாள் காலையில்,  துக்கிலிடப்போவதாக அறிவித்தனர். அவருடைய தலையணை சிறைச்சாலையின் தலைவனுக்கு கொடுக்கப்பட்டது. அதை அறிந்த அவரது மனைவி அதைவிட நல்ல தலையணையை கொடுப்பதாகவும், தன் கணவனது தலையணையை தனக்கு கொடுக்கும்படியாகவும் வேண்டி, அதை பெற்றுக்கொண்டார்கள்.
     அடுத்த நாள், கர்த்தர் அவரை தூக்கிலிடாதபடி அதிசயமாய்க் காத்தார். அவரை வேறொரு சிறைக்கு கொண்டுச் சென்றார்கள், திரும்பவும் அவரது தலையணை அவருக்கு கிடைத்தது. ஒரு நாள், அந்த சிறையில் பாதுகாவலர் அந்த தலையணையை பிடுங்கி, அது வீணானது என்று அதை வெளியே தூக்கி எறிந்தார்.  அப்போது அந்த பக்கமாய் வந்த ஒரு கிறிஸ்தவர் பார்த்தபோது, அதில் பொக்கிஷமான வேத வாக்கியங்கள் இருப்பதை கண்டார். அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பாக வைத்தார். போர் முடிந்த பிறகு வேத வார்த்தைகள் பத்திரமாக இருப்பதுக் கண்டுபிடித்து, அதை அச்சிட்டனர். பத்து வருடங்கள் கழித்து 1834 ஆம் அண்டு முழு வேதாகமமும் கடினமான மொழி என்றுச் சொல்லப்படுகிற பர்மிய மொழியில் அச்சிடப்பட்டு, வெளியாக்கப்பட்டது
நண்பர்களே உலகில் எத்தனையோ பேர்… வேதாகமம் என்று இருப்பதையே யாரும் அறியாதபடி அதை அழித்துப் போடுவோம் என்று போராடினர்கள். ஆனால் அவர்கள்தான் அழிந்துப் போனார்களேத் தவிர சத்திய வேதமோ என்றென்றும் தனித்தன்மையோடு இன்று நிற்கிறது. புல் உலர்ந்து பூ உதிரும் நமது தேவனுடைய வசனமோ ஏன்றென்றைக்கும் நிற்கும்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE