உழைத்தால் ஆசீர்வாதம் உண்டு

முட்களும், காஞ்சொறியும் வளர வேண்டுமானால், அதற்கு உரம் இடத்தேவையில்லை; பண்படுத்த தேவையில்லை, வெறுமனே விடப்பட்ட நிலத்தில் இவையெல்லாம் தானாக வளர்ந்து விடும். நாம் நம்முடைய தாலந்துகளை உரம்போட்டு வளர்க்காவிடில் முள்ளையும், காஞ்சொறிகளையும் தான்
அறுப்போம். முன்னேற்றம் அடைந்த மக்கள், தாங்கள் வாழ்வில் அதிகமாக உழைத்து, திட்டம் போட்டு வேலை செய்ததினால் தான் வெற்றியைக் கண்டிருக்கின்றனர். தங்களுடைய இலக்கை நோக்கி இரவும் ,பகலும், வெயிலும், குளிரிலும் அவர்கள் கடினவேலை செய்ததினால் தான் அந்த அளவு முன்னேற்றம்
வந்தது. வேலை தேவனால் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதம். ஒருவன் கடினமாய் வேலை செய்யும்போது அவனுடைய உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. அவனுடைய மனது விரிவடைகிறது. அவனுடைய குணம் மேம்பட்டதாய் மாறுகிறது. இந்த பூமியில் மட்டுமல்ல, புதிய பூமியிலும் நாம் சுறுசுறுப்பாக இருப்போம்.
சுறுசுறுப்பான, உண்மையுள்ள வேலைக்காரன் ஒரு நாளும் பலனடையாமற் போனதில்லை. இதில் முறுமுறுத்து பலர் கெட்டுப் போயிருக்கின்றனர்.

14ம் வயதில் ஆபிரகாம் லிங்கன் ஒரு பெரிய ஆள் செய்யக் கூடிய வேலையைச் செய்தார். தன்னுடைய குடும்பத்துக்குப் போதுமான வருமானத்தை வேலை செய்து சம்பாதித்தார். அநேக சமயம் ஓர் உன்னதமான நோக்கத்தை உடையவராய் இருந்து அதையும் சாதித்தார். அடிமை முறையை ஒழித்துக்கட்டினார், கர்த்தருடைய சித்தம், நாம் வேலை செய்து சாப்பிட வேண்டும் என்பதே. கடினமாக உழைப்பதில் பெரிய ஆசிர்வாதம் உண்டு.

“சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்….அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது”. நீதிமொழிகள் 24:30,31

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE