கிறிஸ்துவன் என்பதற்கு விளக்கம் ?

கிறிஸ்துவன் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? வாரத்தில் ஒரு முறை ஆலயம் செல்பவன் என்பதா? அல்லது தன்னைப் போல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நண்பர்களுடன் கூடி தொழுகை செய்பவன் என்பதா? 1875ம் ஆண்டு ஜெர்மெனியில் பிறந்த ஆல்பெட் சுவிட்சர் என்பவருக்கு கிறிஸ்துவன் என்றால் அவன் ஓர் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்தில் உருவாயிற்று. கிறிஸ்துவை போல் வாழ்ந்து காட்டுபவனே கிறிஸ்தவன் என்று நம்பினார். கிறிஸ்து அவன் உள்ளத்திலும், பேச்சிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். இந்த லட்சியத்தைக் கொண்டுதான் அவர் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார்.

அப்போது அவர் செயின்ட் தாமஸ் கால்லூரியின் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பதவியை ராஜினாமா செய்தார். இது அவருடைய நண்பர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. கடந்த 30 ஆண்டுகளாகதான் கற்ற கல்வி, ஆற்றிய பணி, இவற்றை எல்லாம் விட கிறிஸ்துவுக்கு சேவை செய்வதையே தலை சிறந்ததாக கருதி இந்த தீர்மானத்திற்கு வந்தார். அவர் உலகம் அறிந்த ஒரு தத்துவ பேராசிரியர், சிறந்த எழுத்தாளர், சங்கீத வித்வான், பிரபல ஒரு அரசியல் கட்சி அங்கத்தினர். இதை எல்லாம் ஒரு குப்பையாக நினைத்து தள்ளிவிட்டு மருத்துவக் கலையைக் கற்று ஆப்பிரிக்காவுக்கு ஓர் கிறிஸ்துவ மருத்துவராக வந்தும் ஊழியத்தை தொடங்கினார். சுமார் 50 ஆண்டுகள் அப்பணியில் தொடர்ந்து வேலை செய்தார். லேம்பெரினா என்ற இடத்தில் அவரை அறியாதவர் யாரும் இல்லை. ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவினார். சரீர நோய் தீர்க்க வந்த அநேகருக்கு ஆத்ம நோய் தீர்க்கும் மருத்துவராகவும் இருந்தார். அவரது ஊழியத்தின் விளைவாக அந்நாட்டில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்.

சகோதர, சகோதரியே நீ ஆப்பிரிக்கா செல்ல வேண்டாம். எங்கு வாழ்கிறாயோ அங்கே கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றி அநேகரை அவர் வழியில் நடக்க செய்யலாம். அதற்கு ஆயத்தமா?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE