விவசாயியின் வைர ஆசை..

 ஒரு விவசாயி தனக்கிருந்த நிலத்தில் பயிர் செய்து விளைந்ததை வைத்து மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவன் வாழ்வில் ஒரு நண்பன் குறுக்கிட்டு ஒரு சிறிய வைரம் இருந்தால் இந்த ஊரையே வாங்கலாம். கையளவு வைரம் இருந்தால் இந்த நாட்டையே வாங்கலாம் என்று ஆசை காட்டினான். அதை நம்பி சொத்தையெல்லாம் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு வைரம் வாங்க ஊர் ஊராய் சுற்றினான். பணமும் கரைந்தது அலைந்து திரிந்து வருத்தத் தோடு ஒரு நாள் மாண்டும் போனான். இவனிடம் நிலம் வாங்கியவனோ அந்த நிலத்தில் கலப்பை கொண்டு உழுத போது மின்னுகிற கல் ஒன்று தென்பட்டது. சோதித்து பார்த்ததில் விலையுயர்ந்த வைரமாயிருந்தது.
     உள்ளது, போது மென்று மனரம்மியமாய் வாழக் கற்றுக் கொள்வோம். ஆசை எல்லா தீமைக்கும் அழிவுக்கும் காரணமாயிருக்கிறது. என் இயேசு ராஜா எப்போது மேகமீதில் வருவார் என்கிற ஆவல் நம் வாழ்வின் ஆசையாக இருக்குமானால் எப்போதும் சந்தோஷம்தான். காரணம் அந்த ஆசை நம்மை அழிவுக்கு தப்புவிக்கும்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE