கால் முடமான நாய்க்குட்டி

  நாய்க்குட்டி வாங்குவதற்காக சிறுவன் ஒருவன் கடைக்குள் நுழைத்தான். மூன்று நாய்க்குட்டிக்கள் இருந்தன. ஒரு குட்டியின் விலை 300 ரூபாய் என தெரிந்து கொண்டான். சிறுவனிடமோ 200 ரூபாய் மட்டுமே இருந்தது. இருந்தாலும், குட்டிகளைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற நினைப்புடன் உள்ளே போனான். ஒவ்வொன்றாக கையில் எடுத்துப் பார்த்தான். ஒரு குட்டிக்கு கால் முடமாக இருந்தது. அதை அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். கடைக்காரர் அவனிடம், “நீ அந்தக் குட்டியை வாங்குவதாக இருந்தால், 200 ரூபாய்க்குத் தருகிறேன்”என்றார். சிறுவனோ, “நான் சற்று நேரத்தில் வந்து இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி வீட்டுக்குச் சென்றான்.
        வீட்டில் தன் தாயிடம் ஒரு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்கு வந்தான். முடமான நாய்க்குட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு 300 ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்தான். அவர் ஆச்சர்யத்துடன்  “அது  கால் முடமான குட்டி, 200 ரூபாய் போதும்” என்றார். அப்போது அந்த சிறுவன், தன் காற்சட்டையின் வலது பக்கத்தை உயர்த்தி, அவரிடம் தன் காலைக் காட்டினான். அவனுக்கு வலது கால் இல்லை. மரக்கால் பொருத்தி இருந்தது. “ஐயா, “நான் முடவானவன்’ என்ற பிறர் என்னைக் குறைத்து மதிப்பிடுவதை என்னால் தாங்க முடியவில்லை. அதே போல, முடமானது என்று என் நாய்க்குட்டியைக் குறைத்து மதிப்பிட எனக்கு மனதில்லை” என்று கூறினானாம்.
       அன்புக்குரியவர்களே! எந்த நிலையாய் இருந்தாலும் சரி, உங்களையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். மற்றவர்களையும் குறைவாய் எண்ணவேண்டாம். தாழ்வுமனப்பான்மை உயர்வைத் தடுக்கும் எல்லையைக் குறிக்கும். சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டை போடும் தாழ்வு மனப்பான்மைக்கு டாடா சொல்வோரே சாதிக்க முடியும்.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்…. 1 சாமுவேல் 2:8
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE