ஊசியின் காதில் ஓட்டகம்…

ஒரு ஊரிலே ஒரு கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். தன்னிடம் எத்தனை கோடி ரூபாய் இருக்கிறது என்பதைக் காண்பிக்க வீட்டின் மேல் அத்தனை கொடி கட்டி வைத்தானாம். இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவனை விடவில்லை. சேர்த்துக் கொண்டேயிருந்தான்.

ஒரு நாள் அவனைச் சந்திக்க ஊழியர் ஒருவர் சென்றார். ஊழியத்திற்கு காணிக்கைக் கேட்டுத்தான் வந்திருக்க வேண்டும் என்று அந்த செல்வந்தன் எண்ணினான். ஆனால் வந்த ஊழியரோ அந்த செல்வந்தனிடம் ஒரு குண்டூசியைக் கொடுத்து, ‘ஐயா இதை பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். பரலோகம் வரும்போது அங்கே வந்து அதை உங்களிடம் வாங்கிக்கொள்கிறேன்’ என்று கூறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதன் அர்த்தம் தெரியாமல் செல்வந்தர் திகைத்தபோது செல்வந்தனின் மனைவி அர்த்தம் சொன்னாளாம். “ஐயா நீங்கள் எத்தனை கோடி சம்பாதித்தாலும், மாடி மேல் மாடி கட்டினாலும் பூமியிலிருந்து செல்லும்போது எல்லாவற்றையும் விட்டு விட்டுத் தான் போக வேண்டும். ஒரு குண்டூசியைக் கூட உங்களால் பரலோகம் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்த்தவே இந்த ஊழியர் இப்படிச் செய்திருக்கிறார்” என்று சொன்னாளாம். எத்தனை அர்த்தம் நிறைந்துள்ளது பார்த்தீர்களா.

அப்படியானால் சம்பாதிப்பதும், சேமிப்பதும் தவறா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தவறல்ல. எது முக்கியம்? சம்பாதிக்கவும், சேமிக்கவுமே நேரத்தை செலவிட்டு நித்தியத்தைக் குறித்து எண்ணமற்றுப் போனால் பிரயோஜனமில்லையே. உலகைப் பற்றி அக்கறை தேவைதான். ஆனால் அதைக் குறித்த கவலை தேவையில்லை அது அர்த்தமற்றதும் கூட.

சகோதரர்களோ! ஓடி ஓடி பேரரசுகளை கைப்பற்றின பேரரசர் அலெக்ஸாண்டர் தான் சாகும் போது ஒன்றையும் கொண்டுபோகவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும்படி கைகள்
இரண்டும் விரித்து சவப்பெட்டியில் கொண்டு செல்லுங்கள் என்று சாகும் முன்பே கூறினாராம்.

“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும் இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” மத் 6:19,20

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE