அவசர பட்டுடேனே…

ரயில் கிளம்புகிற நேரம் தகப்பனும், இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ராகேஷ்-ம் வேகமாய் வந்து இருக்கையில் அமர்ந்தனர். ரயிலும் புறப்பட்டது.

அப்பா… இங்கு பாருங்க… நின்னுக்கிட்டிருக்கிறவங்க எல்லாம் பின்னால போறாங்க. மரமெல்லாம் பின்னால போவுது. கட்டிடங் கூட பின்னாலே போகுதேப்பா. ஏன்பா இப்படி? என்றான். அப்பா சிரித்துக் கொண்டார். பதிலேதும் பேசவில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் மழை சோ என கொட்டியது.மழை எழுப்புகிற சத்தத்தையும், அது பூமியை நனைக்கிற விதத்தையும் ரசனையோடு பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ராகேஷ், அப்பா, அப்பா வானத்திலிருந்து சோ என தண்ணீர் கொட்டுதுப்பா. என் கையுலயும் சுளீர் சுளீர் என விழுந்து தெறிக்குதுப்பா என்றான், உள்ளங்கையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டே.

இவ்வளவு பெரிய பையன் மழையைப் பார்த்து ஆச்சரியப்படுறான். அப்பாவும் பேசாமல் வருகிறார். இதென்னாட இது.. என அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்.

சில நிமிடம் கழித்து இருட்டத் துடங்கியது. நேரடி வர்ணனை போல அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பரவசப்பட்டு பேசிய விதம், அருகிலிருந்தவர்களை பதட்டப்படுத்தியது. திடீரென ராகேஷ் “அப்பா இங்க பாருங்க. பாருங்களேன் என்று வானத்தைக் காட்டி ஆச்சரியமாய் சிரித்துக்கொண்டே கூறினான்.” அப்பாவும் மகனுடைய சந்தோஷத்தில் அமைதியாய் பங்கெடுத்துக் கொண்டார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சக ரயில் பயணிகளுக்கோ பயங்கர வித்தியாசமாயிருந்தது. “லூசுபோல..’ என்று ஒருவர் அடுத்தவரின் காதிலே மெதுவாக கூறினார். இருவரும் சிரித்தனர். அதுவரை பொறுமையாய் அமர்ந்திருந்த ஒருவர் வாயைத் திறந்தார். தகப்பனிடம், “உங்கள் மகனை நல்ல மனநல மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வைத்தியம் செய்யலாமே என்றார் அன்போடு.

தகப்பன் கூறினார் என் மகனுடைய இரண்டு கண்களிலும் பிறந்ததிலிருந்தே பார்வையில்லை. அவனுடைய கண்ணிலே தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவன் பார்வையடைந்தான். இன்று தான் முதன்முறையாக அவன் வெளியுலகைப் பார்க்கிறான். அதனால் அமர்ந்திருந்த அனைவரும் தாங்கள் தவறாக நினைத்ததை எண்ணிவருந்தினர்.

“தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள்.” (யோவான். 7:24)

அவசரப்பட்டு அநேகந்தரம் நாமும் இத்தவறைச் செய்கிறோம் அல்லவா. வெளிப்புறத்தை மட்டும் பார்த்து எதையும் யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டி விடுகிறோமே. கொட்டின வார்த்தைகளை ஒரு போதும் அள்ள முடியாது என்பதை சிந்தித்துண்டா. சிந்திப்போம்! செயல்படுவோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE