குடும்ப வாழ்வின் உறுதிமொழி.

மனிதன் ஒருவன் பெண் ஒருத்தியை மனதார விரும்பி திருமணம் செய்து, திருமணத்தின் கனியாகப் பிள்ளைச் செல்வத்தையும் பெற்றான். ஆனால் ஆண்டுகள் சில கடந்த பிறகு கணவன், மனைவி இருவரும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டைப் போட ஆரம்பித்தனர். அவர்களுடைய மகன் ஒருநாள் தன் தாயைப் பார்த்து “அம்மா, திருமணம் செய்யும்போது கணவன் மனைவி என்ன வாக்குறுதிகொடுக்கிறார்கள்” என்று கேட்டான். அதற்கு தாய், “ஒருவரையருவர் கடைசி வரை அன்பு செய்வதாக வாக்குக் கொடுக்கிறார்கள் மகனே” என்றாள் அன்பாக. உடனே அவள் மகன், “அம்மா அப்படியென்றால் நீங்களும் அப்பாவும் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளமல் இருக்கிறீர்கள்” என்றானாம். இன்று அநேகர் தங்கள் திருமண உறவில் விரிசல் கண்டு வாழ்கிறவர்களாக இருக்கிறார்கள்.

எபேசியர் 5:33ல், “எப்படியும், உங்களில் அவனவன் தன்னிடத்தில் அன்பு கூருவது போல, தன் மனைவியிடத்திலும் அன்பு கூரக் கடவன், மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக் கடவள்”, என்று வாசிக்கிறோம்.

அன்பினால் கட்டப்படாத கணவனும் மனைவியும் உண்மையில் திருமணமனவர்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவகுடும்பங்கள் மற்ற குடும்பங்களுக்கு மாதிரியாக இருக்க வேண்டுமானால், இதுவே குழந்தைகள் நற்குணசாலிகளாக வளர்வதற்கு அஸ்திபாரமாக அமையும். திருமணம் என்பது ஏதோ ஒரு சடங்கு அல்ல. அது நித்தியத்துக்கு நேராக நம்மை வழி நடத்தும் அற்புத சக்தி கொண்ட ஒரு தெய்வீக நியமனம், ஆகவே திருமணமானவர்கள் அன்பு மொழி பேச இன்று தீர்மானம் எடுங்கள். கணவன் மனைவி அன்பாக இல்லாவிட்டால் குழந்தைகளும் அன்பில்லாதவர்களாகவே வளர்வார்கள். கிறிஸ்தவ சமூகமே அன்பில்லாத சமூகமாக வளரும். இது தேவனுக்கு சபைக்கும் அவப்பெயர் கொண்டு வரும் என்பதை உணர்ந்து அன்புடன் செயல்படுங்கள்.

“இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்”. மத்தேயு 19:5

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE