தூரப்படுத்து

“உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால்,அதைப்பிடுங்கி எறிந்து போடு” (மத்.5:29).

பாவங்களை அப்புறப்படுத்துவதில், நீங்கள் எவ்வளவு உறுதியாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் உங்களுக்குப் போதித்திருக்கிறார்! “பாவத்திற்க்கு விரோதமாய்ப் போராடுகிறதில், இரத்தஞ்சிந்தப்படத் தக்கதாக, நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே”(எபி.12:4)

தலையில் இடியாப்பம் வைத்துப் பிழைப்பு நடத்தினார், ஒரு ஏழை வியாபாரி. அவ்வூரில் ஒரு குரங்கு ஒவ்வொரு நாளும் திடீரென்று இவர்மேல் ஏறி, பல இடியாப்பங்களை அள்ளிக்கொண்டு ஓடிவிடும். இதற்க்கு முடிவுகட்ட விரும்பி, அந்த வியாபாரி ஒரு நாள் தன் கூடையில் தீக்கங்குகளை பரப்பி, “இடியாப்பம்’ என்று கூறி தெருவில் வந்தார். அந்த சத்தத்தைக் கேட்டதும் குரங்கு மிக வேகமாக ஏறி இரண்டு கை நிறைய அள்ளியது. அந்தோ! அத்தனையும் தீக்கங்குகள். குரங்கு பிடியை விடாதல்லவா? அதன் கைகளெல்லாம் வெந்துப்போனது! உங்களது கண்களும், உள்ளமும் ஒரு குரங்குதான். பாவஞ்செய்ய செய்ய, அது விட முடியாது பழக்கமாகி விடும் . அது உங்களை நரகத்திற்குக் கொண்டு சென்று விடாதபடி இப்பொழுதே அவற்றை தீர்மானத்தோடு அப்புறப்படுத்துவீர்களாக! கெட்ட சகவாசங்களை, வேண்டாத உறவுகளை, விபச்சார சிந்தனைகளை உபவாசத்தோடும் உறுதியோடும் வெட்டி எறியுங்கள், அது ஒரு வேளை இப்பொழுது வேதனையளித்தாலும், பரவாயில்லை; நித்தியத்தை நிம்மதியாக கழிக்கலாமே!

“எல்லாக் காவலோடும், உன் இருதயத்தைக் காத்துக்கொள். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து” (நீதி .5:23,24)

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE