நட்சத்திர மீன்

கடல் வாழ் ஜீவனில் நட்சத்திர மீன் என்ற ஒரு மீன் இனம் உண்டு அதற்கு பல கைகள் உண்டு அந்த மீனை உபத்திரவப்படுத்தி அதனுடைய ஏதாவது ஒரு கையை துண்டித்து விட்டாலும், துண்டிக்கப்பட்ட அந்த கையானது திரும்பவும் வளர்ந்துவிடும், நட்சத்திர மீனை எங்கு வெட்டினாலும் அதன் மத்திய பாகம் ஒரு புதிய மீனாக உருவெடுத்துவிடும். இது தேவனுடைய விசேஷ சிருஷ்டிப்பு. இதை மீனவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மற்ற மீன்களை பார்க்கிலும் நட்சத்திர மீன்களை பிடித்து நாம் துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசி எறிந்தாலும் கடலில் விழுந்த துண்டு பகுதிகள் திரும்பவும் ஒரு புதிய முழு மீனாக உருவாகிவிடும். அழித்துவிட வேண்டுமென்று வெட்டுகிறோம் ஆனால் அவைகள் பலுகி பெருகுகின்றன.
நூற்றாண்டு காலங்களாக அநேக நாடுகளில் கிறிஸ்துவர்கள் வெறுக்கப்பட்டும், உபத்திரவப்படுத்தப்பட்டும் காணப்படுகிறார்கள். ஆனால் உபத்திரவங்கள்
கிறிஸ்தவர்களை அழிக்க முடியவில்லை. மிகக் கொடூரமான வேளைகளிலும், சபை தப்புவிக்கப்பட்டதுமல்லாமல் வீர நடைப்போட்டு அதிகவேகமாக பரவ ஆரம்பித்தது. இயேசு தனது சபையைக் குறித்து “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை” (மத் 16:18) என்று சொன்னார். எவ்வளவுதான் உபத்திரவம் நம்மை நோக்கி வந்தாலும் எப்பொழுதும் முன்னேறிசெல்லும் நமது கிறிஸ்தவ சேனை. இந்த சேனை கடைசியில் வெற்றிபெறும் சேனையாகவும் மாறும். நீங்கள் அதன் வீரராக மாறியிருக்கிறீர்களா? இல்லையானால் ஏன் என்று சிந்தியுங்கள். தேவன் உங்களைத் தன் சேனையின் வீரராக மாற்றுவதற்காகவே! இந்த செய்தியை நீங்கள் வாசிக்கும்படி வழி நடத்தியிருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE