ஒரு மீன்.. ஒரு கழுகு..

ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப் பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும் பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது. அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால் கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக களைப்புற்றது கழுகு. அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக முடியாது என்று உணர்ந்த கழுகு மீனை கீழே போட்டு விட முயன்றது. ஆனால் அதன் கூர்மையான நகங்கள் மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும் முடியவில்லை. தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்து போக, அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக்கொண்டிந்த அதே குளத்தில் கழுகும் விழுந்து செத்துப்போனது.

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு அதனை பிடித்துக் கொள்கிறோம். ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட நினைத்தால். அது நம்மை விடாது. எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE