வாய்ப்பாட்டை கண்டுபிடித்தவர் யார் ?

விவேக் என்பவர், மதிய உணவு இடைவெளி நேரத்திலும், வேலைசெய்கிற போது இடையிடையே கிடைக்கிற ஓய்வு நேரத்திலும் வேதத்தை எடுத்து வாசிப்பார். அவர் வேதம் வாசிப்பதை அனுதினமும் பார்த்திருக்கிற சகஊழியர்கள் அவரை கேலிசெய்வர்கள்.
     அன்றொரு நாள் அவருடைய முதலாளி விவேகின் கையிலிருக்கிற வேதத்தைப் பார்த்துவிட்டார். சகஊழியர்கள் எல்லாம் வேதம் வாசித்துக்கொண்டிருந்த விவேகை கிண்டல் செய்திருக்க…. முதலாளியோ வேதத்தை எழுதியவரைப்பற்றி அவரிடம் சந்தேகத்தை உண்டாக்கப் பார்த்தார்.
         இந்த வேதத்திலிருந்து நீ உபயோகமான எந்த கருத்தை அறிந்துகொள்ளப்போகிறாய்…? நீ வாசிக்கிற இந்த வேதம் யாரால் எழுதப்பட்டது என்று எனக்குத் தெரியுமாக்கும்…? எத்தனையோ வருடங்களுக்கு முன்
எழுதப்பட்ட பழங்கதையைப் போய் இப்படி வாசித்துக்கொண்டிருக்கிறாயே’ என்று கேட்டார்.
      உடனே விவேக், “நாம் கணக்கு செய்வதற்கு பயன்படுத்துகிற வாய்ப்பாட்டை கண்டுபிடித்தவர் யார் என்று எனக்கு கூறுங்கள் பார்ப்போம்’ என்றார். முதலாளி உடனே “யார் எழுதினார்கள் என்பதா முக்கியம்…
அந்த வாய்ப்பாடு உபயோகமாயிருக்கிறதா என்பதுதான் முக்கியம்!’ என்று பதலளித்தார். அதற்கு விவேக்,”எத்தனையோ சந்ததிகளுக்குமுன்பிருந்தே நாம் படித்துவருகிற யாரோ ஒருவரால் எழுதப்பட்ட வாய்ப்பாடு, கணக்குகளை சுலபமாய் செய்வதற்கு பயன்படுகிறது என்ற ஒரே காரணத்தால் அதை நம்புகிறீர்கள் அல்லவா? அதுபோல நான் வாசிக்கிற இந்த  வேத வசனங்கள் வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும் செயல்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இதை நம்புகிறேன் என்றார்.
      வாழ்க்கையின் நெறிமுறைகளையும், வரையறைகளையும் விளக்கிக்கூறுகிற பரிசுத்த வேதாகமம் உங்களிடம் உண்டா? அப்படியானால் தினமும் வேதத்தை தியானியுங்கள். வேதம் உங்கள் மனமகிழ்ச்சியாகட்டும்.
சங்கீதம் 119:174
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE