கல்லை அகற்றினால் பரிசு.

ஒரு ராஜா தன்னுடைய மக்கள் மிகவும் கவலையீனமாய் இருக்கிறார்களே என மிகவும் வருத்தப்பட்டு அவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்தார். ஒரு நாள் இரவு, நான்கு ரோடுகள் சந்திக்கும் நாற்சந்தியின் மத்தியில் ஒருபெரிய கல்லை புரட்டி வைத்துவிட்டுப் போனான். அடுத்த நாள் அநேகர் அவ்வழியே சென்றார்கள் ஆனால் ஒருவர் கூட அதனை அப்புறப்படுத்த வேண்டும் என முயற்சிக்கவில்லை. வியாபாரிகள் தங்கள் வாகனங்களில் பக்கமாய் விலகிச் சென்றனர். ஒரு பெரிய அரசாங்க அதிகாரி தன் வாகனத்தில் சென்றார். ஆனால் அவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நாட்டைக் காக்கும் ஒரு போர் வீரன் தன் குதிரையில் அந்த வழியே சென்றான். ஆனால்அவனும் கூட அதனை கண்டும் காணாதவன்போல விலகிச் சென்றான். இதனை அப்புறப்படுத்தாமல் அரசாங்கத்தை குறை கூறினார்கள். இப்படி ஒருவாரம் அந்த கல் அங்கேயே இருந்தது. ஒருவராகிலும் அதனை அகற்றவில்லை. அடுத்த நாள் ராஜா அங்கு வந்தார். ராஜா வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டவுடன் திராளான ஜனங்கள் கூடிவிட்டனர். ராஜா நான்கு போர் வீரர்களை அழைத்து அந்த கல்லை சற்றே அகற்றினார். அதற்கடியில் ஒரு இரும்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இப்படிப்பட்ட வாசகம் எழுதி ஒட்டி இருந்தார்கள். “இந்த கல்லை அகற்றும் மனிதனுக்கு இந்த பரிசு” என எழுதியிருந்தது. அந்த பெட்டிக்குள்ஏராளமான தங்க நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்தவர்களாகிய நமக்கும் இது ஒரு நல்ல பாடம். ஆண்டவர் வேதபுத்தகத்தில் பொக்கிஷம்போல இருப்பதை நம்மில் அநேகர் உணருவதில்லை. அநேகர் அதனை அசட்டை செய்கிறோம். நம்முடைய கரத்திலும் வீடுகளிலும் வேதம் இருந்த போதிலும் அதை வாசித்து தியானித்து பயன் அடைபவர்கள் மிகச்சிலரே. வேதவசனங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வேதம் கூறுகிறது. தேவனைக் குறித்து சாட்சியிடும் வேதத்தை இன்று வாசித்தீர்களா?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE