மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

பெரியவர் ஒருவர் ஒருநாள் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரே ஒரு படித்த வாலிபன் அமர்ந்திருந்தான். குறிப்பிட்ட இடம் வந்தபோது இருவரும் ஒரே நிலையத்தில் இறங்கினர். படித்த இளைஞனின் கையில் ஒரு சிறிய பெட்டி இருந்தது. அதைச் சுமப்பதற்காக கூலியாளை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். அவரோடு பயணம் செய்த பெரியவரிடமும் ஒரு பெட்டி இருந்தது. அவர் அந்த இளைஞனிடம் தம்பி உங்களிடம் இந்த ஒரு பெட்டிதானா வேறு எதுவும் உண்டா என்று கேட்டார். வாலிபன் ஒன்று மாத்திரமே என்றதும். பெரியவர் அதை என்னிடம் கொடுங்கள்; நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று தன் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு பெட்டியாக வைத்துக் கொண்டார். படித்த வாலிபன் தங்குகிற விடுதிவரை பெட்டியைச் சுமந்து போய் கொடுத்துவிட்டு தான் போகவேண்டிய இடத்துக்கு திரும்பினார். அப்போது அந்த வாலிபன் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து அவருக்கு கூலியாக கொடுத்தான். ஆனால் பெரியவர் தான் செய்த உதவி கூலிக்காக இல்லையென்றும் அது ஒரு சேவை என்றும் கூறி போய்விட்டார். மாலை நேரத்தில் ஒரு பெரிய பாரட்டுக் கூட்டம் நடந்தது. அந்த படித்த இளைஞன் அந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்தான். அவனது மாபெரும் ஆச்சரியம் என்னவென்றால் அந்த நாளில் பாரட்டப்பட்டவர், காலையில் அந்த இளைஞனிடம் பெட்டி சுமந்தவரே, அவர்தான் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், அவரது தாழ்மையைக் கண்டு வியந்துபோனான் அந்த இளைஞன். திருக்குறள் சொல்கிறது “பெருக்கத்தில் வேண்டும் பணிவு” என்று. ஞானியாகிய சாலமோன் (நீதி 15:33) “மேண்மைக்கு முன்னானது தாழ்மை” என்று சொல்கிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு மிக முக்கியமாக காணப்பட்ட வேண்டிய குண லட்சணம் தாழ்மையாகும். இதைத் தேவன் தமது ஜீவியகாலத்தில் காட்டினார். அவர் சிலுவையின் மரணபரியந்தம் தன்னைத் தாழ்த்தினார் என்கிறது வேதம். கர்த்தர் நம் அனைவருக்கும் தாழ்மையின் சிந்தனையையும் குணலட்சணங்களையும் கொடுக்க ஜெபிப்போம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE