நிலக்கரி பாட்டி

சரக்கு ரயில் வண்டிகள் நின்று செல்லுமிடத்தில் நிலக்கரி விற்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு கிறிஸ்தவர். ஒவ்வொரு நாளும் அம்மனிதர் சில நிலக்கரி கட்டிகளை எடுத்து ரயில் பாதையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த வேலிக்கு அப்பால் தண்டவாளத்தில் விழும்படி வீசி எறிந்து வந்தார். அங்கு வேலை பார்த்த ஒரு வாலிபனுக்கு அம்மனிதரின் செயல் வியப்பாகவும், கேள்வியாகவும் இருந்தது. அதைக் குறித்து ஒரு நாள் அம்மனிதரிடம் கேட்டான். அதற்கு அவர், “இந்த தெருவுக்கு எதிர்புறத்தில் ஒரு வயதான பெண்மணி வசித்து வருகிறார். அரசாங்கத்திலிருந்து அவள் பெறும் உதவித்தொகை அவளது தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே அவள், ரயில்கள் போன பின் தண்டவாளத்தில் விழும் நிலக்கரியை பொறுக்கி தன் வருமானத்தை பெருக்கி வந்தாள். ஆனால் நிலக்கரியால் இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டு டீசல் வண்டிகள் வந்து செல்வதை அறியாமல் தினந்தோறும் நிலக்கரி பொறுக்க வருகிறாள். அவள் ஏமாற்றத்துடன் வெறுமனே திரும்பி செல்வதை நான் விரும்பவில்லை. எனவே தான் தினமும் சில கரித்துண்டுகளை அவள் பொறுக்கிக் கொள்ளும்படி போடுகிறேன்” என்றார்.

இவ்விதமாக நம்மோடு தொடர்பு கொண்ட மக்கள் நம் மனதுருக்கத்தையும், பெருந்தன்மையையும் கண்டு தேவஅன்பை ருசிக்க வேண்டும். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:8). இதன் படி நாமும் தேவ அன்பை விளங்கப்பண்ணுவோம்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE