நம்பிக்கை வேண்டும்

ஒரு பஸ் திடீரென்று நின்றுவிட்டது. அந்த பஸ்ஸை ஓட்ட ஒரு குறிப்பிட்ட டிரைவரால் தான் முடியும் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து பஸ் புறப்படும் என் அறிவித்தார்கள். எல்லாரும் எறி உட்கார்ந்தார்கள். அங்கே அந்த டிரைவரை பார்த்ததும் அனைவருக்கும் பலத்த நம்பிக்கை ஏற்பட்டது. வியாபாரம் ஒன்று நடக்கவேண்டுமானால் நம்பிக்கை மிக மிக அவசியம். ஒவ்வொரு நாடும் அதின் ஜனங்களை நம்பித்தான் இருக்கிறது. நம்பிக்கையிநாலே அநேக காரியங்கள் நடந்தேறுகிறது. நம்பிக்கையிழந்தால் அங்கே பயமும், குழப்பமும், நடுக்கமும் ஏற்படுகிறதை காண்கிறோம்.

துரதிஷ்டவசமான காரியம் என்னவென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் தேவனுடைய சபையிலும் நுழைந்து விடுகிறது. சபை சீர் கெடுகிறது. எங்கே போதகரும், மூப்பரும், சபை விசுவாசிகளும் ஒருவரையருவர் நம்பி தேவனுடைய ஊழியத்தை நடத்துகிறார்களோ, அந்த சபை மிகவும் பாக்கியமுள்ளது.

மனைவி தன்னுடைய கணவனின் நம்பிக்கையை இழந்துவிட்டால் அங்கே சந்தேகங்கள் ஏற்படுகிறது. சந்தோஷம் இல்லாமல் போய்விடுகிறது. நம்பிக்கை இவ்வுலகின் எல்லா பொன், வெள்ளியைப் பார்க்கிலும் விலையுயர்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நம்முடைய தேவனிடத்தில் நம்பிக்கை இழக்காமலிருப்பது நல்லது. உபத்திரவம், சோதனைகள் வரும்போது நம்முடைய தேவன் நம்மைக் கவனிக்கிறாரா? இல்லையா? என்ற அச்சங்கள் எழும்பக்கூடும். அப்போது தான் நாம் தேவனிடத்தில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். அவர் நம்மை பத்திரமாக நடத்துவார்.

ஒரு சபையின் பெலன், அதின் அங்கத்தினர்களின் மீதுவைக்கப்படும் நம்பிக்கையே.அதை நடத்துபவர்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கையே. அவ்விதமான சபைகள் அனுதினமும் வளரும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE