ஓசன்னா என்றால் என்ன?

“ஓசன்னா” என்ற சொல்லுக்கு “இரட்சியும்” அல்லது “இப்பொழுது உதவிச் செய்யும்” என்று அர்த்தமாகும். இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரப் பண்டிகையை வருடந்தோறும் ஆசரிக்கும்போது, கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், பலிபீடத்தை ஒரு நாளுக்கு ஒரு முறைவீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவதுண்டு. எட்டாவது நாள் பெரிய ஓசன்னா நாள்! அந்த நாளில் மட்டும் ஏழு முறை “ஓசன்னா” என்று ஆர்ப்பரித்து, மிகுந்த உற்சாகத்தோடு சுற்றி வருவார்கள்.

இயேசுகிறிஸ்து கூடாரப் பண்டிக்கைகளின்போது, எருசலேமுக்கு வந்த படியால் ஜனங்களெல்லாரும், “இயேசுவே தங்களை தங்கள் பகைவர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கக்கூடியவர்” என்று அறிந்து அவ்வாறு துதித்தார்கள். “தாவீதின் குமாரனே” என்று அழைத்தார்கள். “கர்த்தாவே இரட்சியும், கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும்” என்று தாவீது பழைய ஏற்பாட்டில் ஓசன்னாவுக்கு அர்த்தமாக (சங் 118:25) எழுதி வைத்த சம்பவம், நிறைவேற்றும்படி போற்றினார்கள்!

இப்படி துதித்துப் புகழ்ந்த ஜனங்கள், இன்னும் ஐந்தே தினங்களில் இயேசுவே சிலுவையில் அறையும்படி கூக்குரலிட்டார்கள் என்றால், மனுக்குலம் எவ்வளவு துரிதமாய் மனதை மாற்றிக்கொள்கிறது என்பதை அறியலாம்! வானளாவ உயர்த்தி புகழ்பாடும் சமுதாயம், மிகச் சீக்கிரமே பாதாளப் பரியந்தம் தாழ்த்தி வேதனைப்படுத்தும். உலகத்தாரின் புகழுரை, விரைவிலே அவதூறாய் மாறும்! மனிதனால் வரும் புகழ்ச்சியை அல்ல, தேவனால் வரும் மேன்மையையே விரும்புவீர்களாக!

“அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை” சங்கீதம் 78:37.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE