மேன்மைக்கு முன்னானது தாழ்மை

உலக புகழ்பெற்ற விண்ட்பெர்க் வாலிபனாயிருந்த சமயத்தில் ஒரு சிறிய இஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய விமானத்தில் மாபெரும் அட்லான்டிக் சமுத்திரத்தை கடந்து உலக மக்கள் தங்கள் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக்காட்டி சரித்திர புத்தகத்தில் தன் பெயர் பொறிக்கப்பட்டதற்காக அளவற்ற மகிழ்ச்சியுற்றான். அவனுக்குக் கிடைத்த வாழ்த்து மடல்கள், பரிசுப்பொருட்கள் கணக்கிலடங்காது. சுமார் முப்பது லட்சம் கடிதங்கள் அவனை வாழ்த்தி வந்தது. சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வாழ்த்துத் தந்திகள் வந்தது. லட்சக்கணக்கான டாலர்கள் கிடைக்கப் பெற்றான். அவனுக்கு வந்த பரிசுப்பொருட்களை மட்டும் ஏற்றிச் செல்ல மூன்று கார்கள் தேவைப்பட்டதாம். அந்த சமயத்தில் நியூயார்க் நகரில் இவனைப் பாராட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான், மற்ற நிகழ்ச்சியை காட்டிலும் மாபெரும் நிகழ்ச்சியாக இருந்தது. இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட இமாலய சாதனை படைத்துவிட்டானே என புகழாத மக்கள் இல்லை எனலாம். ஆனால் இவ்வளவு தூரம் தன் பெயர் கொடிகட்டி பறந்தும் இளம் வாலிபர் விண்ட்பெர்க் மிகவும் அமைதியாகவும் அடக்கமாகவும் காணப்பட்டது தான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மற்ற இளைஞர்களுக்கு தான் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தான்.

இன்றைய நாட்களில் நம்முடைய இளைஞர்களில் எத்தனை பேர் இது போன்ற சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைத்தால் தாழ்மையை கடைபிடித்து மற்றவர்களுக்கு மாதிரியை காண்பிப்பார்கள்? நாம் எப்போதும் தாழ்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும், என்று தான் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவர் யாருக்கு கிருபை அளிக்கிறார் எனில் பேதுருவை கேட்டுப்பார்த்தால் அவர் கூறுகிறார். “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1பேதுரு 5:5)” தாழ்மையின் ரகசியத்தைக் கற்றுக் கொள்வோமா? கிறிஸ்துவில்
காணப்பட்ட தாழ்மை நம்மிடம் காணப்பட வேண்டும். அப்போது தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

“அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி 18:12

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE