மனைவிக்குத் தலை கணவன்

ஒரு ஆலயத்தில் நடைபெற்ற குடும்ப முகாமில் போதகர் ஆண்களுக்கு ஒரு கேள்வி கேட்டார்.” மனைவியின் சொல் கேட்டு நடக்கிற கணவன்மார்களெல்லாம்வலப்பக்கமும், மனைவியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற ஆண்கள் இடது பக்கமும் வந்து நில்லுங்கள் “. ஒரே ஒருவரைத் தவிர சபையிலிருந்த மற்ற ஆண்களெல்லாம் வலது பக்கத்தில் வந்து நின்றனர். போதகர் வலது பக்கத்தில் நிற்கிறவர்களை பார்த்து “உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். மனைவிக்குத தலையாயிருக்கும்படி ஆண்டவரின் சாயலால் படைக்கப்பட்ட நீங்கள் உங்கள் மனைவிக்குக் கீழ்ப்பட்டு நடந்து ஆண்டவரின் இருதயத்தை துக்கப்படுத்துகிறீர்கள். ஆனால் இடது பக்கத்தில் நிற்கிற இந்த ஒரே ஒருவர் மட்டுமே ஆண்டவரின் பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்.இவரைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், என்று அந்த மனிதரிடம் திரும்பி “ஐயா, நீங்கள் தலையாயிருந்து குடும்பத்தை நிர்வகிக்கும் முறையை இவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்,”என்றார். சிறிதும் தாமதமின்றி அந்த மனிதரிடமிருந்து வந்த பதில், “ஐயா, எனக்கு அதெல்லாம் தெரியாது. இடது பக்கத்தில் நிற்கும்படி என் மனைவி கூறியதால் இங்கே நிற்கிறேன்”!
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்! -எபேசியர் 5:23
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE