நேர்மை

 இணைய தளத்திலுள்ள(internet) சில அகராதிகள்(online dictionaries)  தங்களில் அதிகம் தேடப்படும் வார்த்தைகளை வெளியிடுவதுண்டு2005ஆம் ஆண்டில் அகதிகொள்ளை நோய்சுனாமி போன்ற வார்த்தைகளே அதிகம் தேடப்பட்டவைஅந்த வருடம் நிகழ்ந்த பயங்கரமான இயற்கை சீற்றங்களால் இந்த வார்த்தைகளின் அர்த்தம் தேடப்பட்டதை  அறிந்து கொள்ளலாம்.
மிரியம்வெப்்டர் இணையதள அகராதியில் அதே ஆண்டு அதிகமாக தேடப்பட்ட வார்த்தை நேர்மை(integrity) என்கிறார்உண்மையும் ஒழுக்கமும் இதன் அர்த்தம். இது லஞ்சத்தையும்ஒழுக்கக் கேடுகளையும் அறவே வெறுப்பவர்களைத் குறிக்கும்இந்த வார்த்தையின் அர்த்தத்தை அநேகர் தேடியது ஏன்? ஒருவருடைய வாழ்க்கையிலும் இதைக் காண முடியாததால் தான் இதன் அர்த்தத்தை தேடுகிறார்களோ?
இந்த நேர்மை என்ற வார்த்தையின் அர்த்தத்தை தேவன் தமது வேத புத்தகத்தில் யோசேப்பின் வாழ்க்கை மூலமாக விளக்குகிறார்.போத்திபார் யோசேப்பை தன் வீட்டின் மேலும்தனக்குண்டாண எல்லாவற்றின் மேலும் விசாரனைக்காரானாக வைத்தான்.(ஆதி 39:5) அவனுடைய எஜமானனின் மனைவி அவனைத் தவறான உறவுக்கு அழைத்தபோது யோசேப்பு சம்மதிக்காமல் இத்தனை பெரிய பொல்லாங்கிற்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படிஎன்றான்அவனுக்கு தேவன் விரும்பும் குணநலன் என்ன என்பது தெரியும். தன் சுதந்தரத்தை இழந்தாலும் நீதியைக் காத்துக் கொண்டான்.
 நேர்மை என்ன என்பதை ஆதியாகமம் 39ம் அதிகாரத்தில் தேடிப் பாருங்கள்பின்பு தேவ பலத்தால் அதை வாழ்ந்து காட்டுங்கள்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE