இயேசு கிறிஸ்துவின் உருவத்தை ஓவியமாக வரைந்தவர்களில் ஜெர்மன் தேசத்தை சார்ந்த ஸ்டீன் பெர்க்கும் ஒருவர். அவர் கிறிஸ்தவர் அல்ல. அவர் இயேசுகிறிஸ்துவின் மேல் நம்பிக்கை இல்லாதவர். ஒருமுறை அவர் ஒரு மலைஜாதிப் பெண்ணைப் பார்த்தார். அவளுடைய அழகைக் கண்டு ஓவியமாக வரைய தனது சித்திரக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே சிலுவையில் இயேசு கிறிஸ்து அறையப்படுவது போன்ற ஓவியத்தை வரைந்து வைத்திருந்தார். அந்தப் பெண் அந்த ஓவியத்தைப் பார்த்து “இந்த மனிதன் மிகக் கொடூரமானவனாக இருக்க வேண்டும். அதனால்தான் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என்றாள். “”இல்லையம்மா! இவரைப் போல் ஒரு நல்லவர் இவ்வுலகில் வாழ்ந்ததில்லை. நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசு இவர்தான்” என்று அந்த ஓவியர் விளக்கம் கொடுத்தார். அப்படி யென்றால் இயேசு உனக்காக மரித்தாரா? என்று கேட்டான்.
இயேசு உனக்காக மரித்தாரா என்ற கேள்வி கிறிஸ்தவரல்லாத அந்த ஓவியரின் உள்ளத்தை அசைத்தது. அன்றிரவே இயேசு என் பாவங்களுக்காக மரித்தார் என்று நம்பினார், தன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்றார். தன் ஜீவிய நாட்களெல்லாம் கிறிஸ்துவுக்கென்று ஊழியம் செய்தார். அவர் வாழ்வை மாற்றியது அந்த பெண் “இயேசு உனக்காக மரித்தாரா?” என்று கேட்ட கேள்விதான்.