வேலையே போனாலும் சரி…

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலுள்ள நீதிபதி மூர் என்பவர் பத்துக்கட்டளைகளை பலகையில் தெளிவாக எழுதி நீதிமன்ற சுவரில் யாவரும் பார்த்து வாசிக்கும் இடத்தில் அதைப் பொருத்தி வைத்தார். அதோடு மட்டுமன்றி ஒவ்வொரு நாள் காலையும் நீதிமன்ற வேலை துவக்குவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஜெபம் செய்துதான் துவக்குவார்.
          அவரது நீதிமன்றத்தைப் பார்வையிட வந்திருந்த உயர்நீதீபதி சார்லஸ் ஸ்பையர்ஸ் பத்துக்கட்டளைகள் அடங்கிய அப்பலகையை அப்புறப்படுத்தும்படியும் நீதிமன்றத்தில் ஜெபம் செய்யும் பழக்கத்தை நிறுத்தும்படியும் உத்தரவிட்டார். அதற்க்கு மூர் “என்னுடைய நீதிபதி வேலையே போனாலும் சரி பத்துக்கட்டளை அடங்கிய பலகையை இந்த இடத்தை விட்டு அகற்றமாட்டேன். நீதிமன்றத்தில் ஜெபம் செய்வதை நிறுத்த மாட்டேன்” என்று மறுத்து விட்டார். இப்படியாக சார்லஸ் ஸ்பையர்ஸ்க்கும் மூர்க்கும் இடையே விவாதம் தொடர்ந்து வந்தது.
            இதை எப்படியோ அறிந்த அலபாமா மாநிலத்தின் கவர்னர் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட நினைத்தார். அப்பொழுது சார்லஸ் ஸ்பையர்ஸ்க்கு ஒரு கடிதம் வந்தது அதில் அலபாமா மாநிலத்தின் கவர்னர் இவ்வாறாக எழுதியிருந்தார்.  “நான் இங்கே கவர்னராக இருக்கும்வரை இதை  நீதிமன்றத்தை விட்டு அகற்றக்கூடாது. ஜெபத்தையும் நிறுத்தக் கூடாது என்ற உத்தரவு எழுதியிருந்தது. அதன் அடிப்படையில் நீதீபதி சார்லஸ் ஸ்பையர்ஸ் தனது உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
    கிறிஸ்துவர்கள். தாங்கள் நிச்சயமாக விசுவாசிக்கும்-காரியங்களில் உறுதியோடு நிற்க வேண்டும். அதன் விளைவாக ஒருவேளை சில துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஆனாலும் தேவன் நமக்கு துணை நிற்பார்.
   “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்”  (சங். 118:6).
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE