ஓய்வுநாளில் வேலை…

பிலடெல்பியாவில் வாழ்ந்த கடவுள் நம்பிக்கையற்ற ஜெரால்ட் என்ற மிகப்பெரிய செல்வந்தர் ஓய்வு நாளில் தன்னிடம் பணிபுரியும் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று கட்டளை கொடுத்தார். ஆனால் அவரிடம் பணிபுரிந்த வாலிபன் ஒருவன், ஓய்வுநாளில், தான் பணியாற்ற முடியாது என்று மறுத்துவிட்டான். அவனை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கும்படி உத்தரவிட்டார் அந்தச் செல்வந்தர்.

சில நாட்களுக்குப் பிறகு, வங்கி ஒன்றிலிருந்து, உண்மையான ஒரு மனிதர் காசாளர் பணிக்கு வேண்டும். உங்களுக்குத் தெரிந்த யாரையாவது எனக்குச் சிபாரிசு செய்யுங்கள்” என்று ஜெரால்ட் அவர்களிடம் அவருடைய நெருங்கிய நண்பர் கேட்டபோது, ஒரு மனிதரை அந்தச் செல்வந்தர் சிபாரிசு செய்தார். அவர் வேறு யாருமல்ல, சில நாட்களுக்கு முன்பு அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட வாலிபர் தான் அவர்.

ஆம், உண்மையாகவே நாம் கர்த்தருக்காக உண்மையாயிருந்தால் அவர் நம்மை ஆசீர்வதிக்கவும் உண்மையுள்ளவராயிருப்பார்.

பிலிப்பியர் 3:7 ல் “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்த வைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.

பிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள. இப்பிள்ளையின் ...
Read More
MORE