லிவிங்ஸ்டன் பற்றித் தெரிய வேண்டுமா?

டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு ஏழைக் குடும்பத்தில்தான் பிறந்தார். தனக்கு ஒன்பது வயது நடக்கும் போது அவர் ஒரு புதிய ஏற்பாடு ஒன்றை பெற்றார். 119ம் சங்கீதத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்ததற்காக , இந்த பரிசு அளிக்கப்பட்டது. தனது பத்தாவது வயதில் “நூல்” நூற்கும் ஆலையில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை! முதல் வாரத்தில் கூலியின் பாதித்தொகையை தாயாரிடம் கொடுத்து விட்டு பாதித் தொகையில் ஒரு லத்தீன் அகராதியை வாங்கினார். இப்படி காலையில் வேலை செய்து, மாலையில் வகுப்புக்கு சென்று விட்டு, இரவு  நேரங்களில்,  நடு இரவு வரையிலும் படித்துக் கொண்டே இருப்பார். 18வது வயதில் அவர் நூல் நூற்கும் கலையைக் கற்றார். இப்போது ஆலையில் கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம் புத்தகத்தை எடுத்துப் படித்து கொண்டே இருப்பார். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன்,. வேலையை விட்டுவிட்டு, முழுநேரப் படிப்பை படித்து, கிளாஸ்கோ என்ற கல்லூரியில் “டாக்டர்”-களுக்குரிய டிப்ளமோ ஒன்றைப் பெற்றார்.

டேவிட் விலிங்ஸ்டன், பணம் சம்பாதிக்க விரும்பவில்லை! ஆட்களை சம்பாதிக்க விரும்பினார். ஆம்! ஆப்பிரிக்காவின் அடர்த்தியான காடுகளில் சென்று ஊழியம் செய்தார். சத்திய வசனத்தை நன்கு படித்தறிந்த ஒரு காரணத்தினால், அதனை நிதானமாய் போதிக்கும் பாங்கைப் பெற்றார். எத்தனையோ இன்னல்களையும், துன்பங்களையும் சகித்த அவர் இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே. சகல நாட்களிலும் இருக்கிறேன், என்ற வாக்குத்தத்ததை அடிக்கடி உரத்த சத்தத்தினால் சொல்லுவார்! தேவனுக்கு முன்பாக உத்தமனாய் நின்ற டேவிட் லிவிங்ஸ்டன் பைபிளை பல முறைகள் படித்தார். நாம் ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரனாக விரும்பினால், இந்த டேவிட் லிவிங்ஸ்டனையும் மனதில் வைக்க வேண்டும். நாம் வெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்க தேவன் உதவுவாராக.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE