லைப் ஜாக்கெட் “Life Jacket”

பல வருடங்களுக்கு முன்பு “Empress of ireland” என்ற கப்பல் நிறைய பயனிகளுடன் இங்கிலாந்தை நோக்கி கடலில் சென்றது. எதிர்பாராதவிதமாக கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் 126 இரட்சண்ய சேனையின் ஊழியத்தலைவர்கள் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து அநேக பயணிகள் கடலில் முழ்கி மாண்டனர். சிலர் உயிர் தப்பினர். விரைந்து வந்த மீட்புக்கப்பல் சடலங்களை மிட்கையில் ஒர் ஆச்சரியத்தைக் கண்டனர். இரட்சண்யச் சேனையின் 126 கிறிஸ்தவ தலைவர்களில் ஒருவரும் “உயிர்காக்கும் பட்டை” எனப்படும் “லைப் ஜாக்கெட்” அணிந்திருக்கவில்லை. தப்பி பிழைத்த ஒருவர் சொன்னார். 126 கிறிஸ்தவத் தலைவர்களில் ஒருவர் சொன்னாராம் “நாங்கள்  எங்கு போகிறோம் என்று அறிந்திருக்கிறோம், எங்கள் இரட்சகரை நாங்கள் அறிவோம். அவரை அறியாதோர் உயிர் பிழைத்து, அந்த நாட்களிலாவது இந்த நல்ல இரட்சகரை அறிந்து கொள்ளட்டும்” என்று உயிர் காக்கும் பட்டைகளை அடுத்தவருக்கு கொடுத்துவிட்டு, கடலில் முழ்கி உயிர் நீத்தார்களாம்.
 கிறிஸ்தவம் என்பது பிறருக்காக…. என்ற தரிசனத்தோடு வாழும் ஒரு மார்க்கமாகும். அந்த மார்கத்தின் வழியாக செல்லும் நம்மில் எத்தனை பேர் மற்றவர்களின் ஆத்துமாவும் பரலோகத்திற்க்கு போக வேண்டும் என்ற கருத்தை மனதில் கொண்டு  வாழுகின்றோம்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்
I தீமோத்தேயு 2-4
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE