இதை செய்து பாருங்கள்.

நாம் அனைவரும் ஒரு பரிசோதனை செய்ய இருக்கிறோம். அதைச் செய்தவற்கு ரூபாய் முப்பது முதல் நாற்பதுவரை ஆகலாம். வீட்டிலுள்ளவர்கள் அதைச் செய்துபார்ப்போம். பற்பசை டியூப் ஒன்றை எடுத்துக் கொள்வோம். சாப்பாடு தட்டு ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது பற்பசை டியூபை அழுத்தி தட்டில் பற்பசையினால் வரைபடம் ஒன்று வரைவோம். வரைந்து முடிந்தபின்னர். பற்பசை முழுவதையும் டியூபுக்கள் செலுத்துவோம் முடியுமா? முடியவே முடியாது. சந்தேகமிருந்தால் இந்த பரிசோதனையைச் செய்து பாருங்கள்.
நமது வார்த்தைகள் பற்பசை போன்றது. ஒருமுறை வெளியே வந்துவிட்டால் மீண்டும் உள்செலுத்த முடியாதது போல வார்த்தைகளை வாயினுள்ளும், மூளைக்குள்ளும் செலுத்த இயலாது. கோபத்தில் கொடூரமான வார்த்தைகளைப் பேசிவிட்டு மன்னிப்புக் கேட்டாலும், பாதிக்கப்பட்ட நபரின் மனதில் ஏற்ப்பட்ட வேதனை மறைந்து போகாது.
சில வார்த்தைகள் பொய் வடிவில் வெளிவருகின்றன. அது நமக்கோ, அல்லது பிறருக்கோ ஆபத்தைவிளைவிக்கலாம். கெட்ட வார்த்தைகள் சிலர் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. நாளடைவில் நிறுத்தமுடியாத கெட்ட பழக்கமாக மாறிவிடலாம். நமக்கே அவமானத்தை ஏற்படுத்தும்.
நம்முடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவது ஆண்டவர் தந்த ஈவு. இந்த வெகுமதியை தவறாக பயன்படுத்தும் பொழுது சாத்தானின் ஆயுதமாக மாறுகின்றது. இனிமேல் ஒவ்வொரு முறை பற்பசை உபயோகிக்கும்பொழுதும், வார்த்தை என்ற வெகுமதியை கவனமாக உபயோகிக்க திட்டம் பண்ணுங்கள். மட்டுமல்லாமல் நமது வார்த்தைகள் பிறகுக்குப் பிரயோஜனமாக மாறவேண்டும். கஷ்டத்திலிருப்பாவர்களுக்கு ஆறுதலாகவும், சோர்ந்து போனவர்களுக்கு உற்சாகமானவைகளாகவும், தவறு செய்கிறவர்களுக்கு வழி காட்டிகளாகவும் நம்முடைய வார்த்தைகள் அமைய தேவன் கிருபை செய்வாராக,

“வார்த்தையினாலாவது, கிருபையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தரகிய இயேசுவின் நாமத்தில் செய்யுங்கள்”. கொலோ 3:17

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE