அம்மாவின் மிஷினெரித்தளம் எங்கே..?

ஒரு முறை ஒரு தாயார் பில்லிகிரஹாமிடம் தன் இரண்டு சிறுகுழந்தைகளோடு வந்தார்கள். “ஐயா எனக்கு மிஷினெரி ஊழியம் செய்ய ஆவலாயிருக்கிறது. என் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு தூர இடத்திற்கு மிஷனெரியாகச் செல்ல விரும்புகிறேன். உங்கள் ஆலோசனை என்ன?” என்று கேட்டார்கள்.

பில்லிகிரஹாம் சொன்னார், “அம்மா, திருமணமாகித் தாயாகி விட்ட ஒரு ஸ்திரீ செய்யும் வல்லமையான மிஷினெரிப்பணி, தன் வீட்டில் அமர்ந்து பிள்ளைகளைத் தேவபக்தியில் வளர்ப்பது தான். உங்கள் வீட்டையே மிஷினெரித்தளமாகவும், உங்கள் முழங்கால்களையே சுவிசேஷ ஆயுதமாகவும் பயன்படுத்துங்கள்”

கர்த்தர் உங்களுக்கு மேன்மையான தாயின் பொறுப்பைத்தந்துள்ளார். அதைச் சிறந்த முறையில் நிறைவேற்றி முடிப்பதைப் பார்க்கிலும் வேறு மேன்மையான மிஷினெரி அழைப்பு ஒன்றுமில்லை. வீட்டில் உங்கள் பொறுப்புகளை முடித்துவிட்டு மீதி நேரங்களில் உங்கள் பகுதியில் நீங்கள் உற்சாகமாய் ஊழியம் செய்யலாம். உங்கள் சபையில் உங்கள் ஆலயத்தில் உங்களது உதவி தேவைப்படலாம். உண்மையான மிஷினெரிப்பணி உங்கள் வீட்டில் ஆரம்பித்து, அண்டை அயலாரிடம் பரவட்டும்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE