ஆர்தூர் அஷே(Arthur Ashe), மிக பிரபலமான விம்பிள்டன் வீரர். 1983 ஆம் ஆண்டில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துபோது தவறுதலாக HIV+ve உள்ள இரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் சிறந்த டென்னிஸ் வீரரான அஷே AIDS நோயால் பாதிக்கப்பட்டார். உலகமுழுவதும் அவரது ரசிகர்கள் கடிதம் எழுதினார்கள். ஒரு ரசிகர் சோகத்துடன், “இந்தக் கொடுரமான வியாதிக்காக தேவன் உம்மை ஏன் தெரிந்தேடுத்தார்”, என்று எழுதியிருந்தார். அதற்கு அஷே, இந்த உலகத்தில் 50 மில்லியன் குழுந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள், அதில் 3 மில்லியன் பேர் டென்னிஸ்ல் ஆர்வம் காட்டுகிறார்கள், அதில் 5 லட்சம் மக்கள் டென்னிஸை முறையாக கற்றுக்கொள்கிறார்கள். 50,000பேர் பயற்சியில் வெற்றிபெற்று போட்டியில் பங்கு பெறுகிறார்கள். 5000 பேர் கிராண்ட் சலாம் வரை தேர்ச்சி அடைக்கிறார்கள். 50 பேர்கள் விம்பிள்டன் விளையாடுவதற்கு தகுதி பெறுகிறார்கள், 4 பேர் அரைசுற்றுக்கும், அதில் 2 பேர் இறுதிசுற்றுக்கும் தேர்வாகிறார்கள். கடைசியாக ஒருவருக்கு மாத்திரம் விம்பிள்டன் வெற்றிக் கோப்பை கிடைக்கின்றது. அதைக் கையில் ஏந்தி நின்ற நான் தேவனுக்கு நன்றி செலுத்தினேன் தவிர மாறாக என்னை ஏன் இதற்காக தெரிந்தெடுத்தீர் என்று அவரைக் கேட்கவில்லை. ரோமர் 8:28ஆம் வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவன் நமக்காக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. சந்தோஷமான பாதையில் பயணித்தாலும் கடுமையான பாதையின் பயணித்தாலும் கர்த்தாராகிய இயேசு கிறிஸ்துவின் கரம் நம்மை விட்டு பிரியாது என்பதை உணரவேன்டும் என்று பதிலளித்தார்.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28