உயிர்போனாலும் பரவாயில்லை

ஜார்ஜ் வாஷிங்டன் என்று அமெரிக்க இராணுவத்தின் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் நாட்களில், அமெரிக்காவை சுயாதீன நாடாக மாற்றுவதற்கு பிரிட்டீஷ் இராணுவத்தோடு அமெரிக்க இராணுவம் போராடிக்கொண்டிருந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க இராணுவத்தை நடத்திக்கொண்டிருந்தார். பிரிட்டீஷ் இராணுவம் அவரைப்பிடிப்பதற்காக தொடர்ந்து நெருங்கிக்கொண்டிருந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் குதிரையில் வேகமாக சில இராணுவத்தினரோடு சென்றுகொண்டிருந்தார். திடீரென்று potomac என்ற நதிக்கு முன்பாக வந்து நின்றார். பின்னால் பிரிட்டீஷ் இராணுவம். முன்னால் போட்டமேக் நதி. நதியோ பனியால் உறைந்திருந்தது. அதனுள் விழுந்தால், அவர் பனியில் உறைந்தே போய்விடுவார். ஆனால், அதன் கரையில், ஜார்ஜ் வாஷிங்டன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, இந்த தேசம், சுயாதீனமாக உம்மை வழிபட வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவாய் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிரிகள் கையில் அகப்பட்டுக்கொண்டால் உம்மை வழிபட விடமாட்டார்கள். எங்களது சுய உரிமையே போய்விடும், எங்களுக்கு அமெரிக்க தேசம் வேண்டும். உம்மைப் பின்பற்றும் தேசமாக அது இருக்கவேண்டும், என் உயிர்போனாலும் பரவாயில்லை; நான் இந்த நதியைக் கடந்து மறுகரைக்குச் சென்று அமெரிக்க தேசத்தின் கொடியை அங்கே நாட்டிவிட்டால் எனக்கு வெற்றிதான். தேசம் ஸ்தாபிக்கப்பட்டும், அமெரிக்கா உருவாகும்” என்று சொல்லி ஜெபம் செய்துவிட்டு, உறைந்திருந்த அந்த பனிக்குள் குதித்தார். பிரிட்டீஷ் இராணுவம் விரைந்து வந்தது, நதியைப் பார்த்ததும், இதில் இறங்கினால் நாம் பிழைக்கவே மாட்டோம் என்று சொல்லி. அவர்கள் வந்த வழியே திரும்பிப் போய் விட்டார்கள். ஆனால், வாஷிங்டன் நீந்தி அடுத்த கரைக்குச் சென்றார். கர்த்தருடைய வல்லமையினால் அவருடைய உயிர் காக்கப்பட்டது. இப்போது வாஷிங்டன் தலைநகரம் இருக்கும் அந்த இடத்திலே அமெரிக்க தேசத்தின் கொடியை அவர் நாட்டினார். அந்த இடத்திலே மீண்டும் முழங்காற்படியிட்டு அமெரிக்க தேசத்தை கர்த்தருக்கென்று பிரகடனம் பண்ணினார். அதோடு பிரிட்டீஷ் இராணுவம் பின்வாங்கியது. அந்த இடத்தில் தான் இன்று அமெரிக்க தலை நகரம் “வாஷிங்டன் d.c ” நிற்கிறது. ஜார்ஜ் வாஷிங்டனின் விசுவாசத்தின் பேரில், அவர் தன் ஜீவனை தேசத்திற்கென்று கர்த்தர் நாமத்தினாலே கொடுத்தபடியினால், அமெரிக்க தேசம் உருவானது அவருடைய பெயரே அமெரிக்க தேசத்தின் தலைநகருக்கு சூட்டப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE