நான் மட்டும் ஆசீர்வதிக்கப்படவேண்டும்.

ஒரு அம்மா ஜெபித்தார்கள். ‘என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே’ என்று. கடவுளும் தரிசனமாகி ஒரு நிபந்தனையின் பேரில் உன்னை ஆசீர்வதிக்கிறேன். ஒரு மடங்கு ஆசீர்வாதம் உனக்கென்றால், அதைப்போல இருமடங்கு ஆசீர்வாதம் உன் எதிர்வீட்டு அம்மாவுக்கு என்றார். இவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அன்று இரவு, ‘எனக்கு ஒரு நல்ல பெரிய வீடு வேண்டும்”என்று ஜெபித்தார்கள். அடுத்த நாள் காலையில் ஒரு பெரிய வீடாய் இவர்கள் வீடு மாறிவிட்டது. உடனே கடவுள் சொன்ன நிபந்தனை ஞாபகத்திற்கு வந்தது, எதிர்வீட்டை எட்டிப் பார்த்தார்கள். இரண்டு பெரிய வீடுகள் காணப்பட்டன். அன்று இரவு, ‘எனக்கு ஒரு கார் வேண்டும்’ என்று ஜெபித்தார்கள். ஒவ்வொரு விசையும் இவர்கள் பெற்றுக்கொள்வதைப் போல இருமடங்கு எதிர் வீட்டமாவுக்கும் கிடைத்தது. ஆகவே ஒரு நாள் காலை ‘ஆண்டவரே என் ஒரு கண்ணின் பார்வையை எடுத்துவிடும்’ என்று ஜெபித்தார்கள். அடுத்த நாள் காலை ஒரு கண் பார்வை போய்விட்டது. எதிர்வீட்டம்மாவுக்கோ இரண்டு கண்களும் நன்றாகவே இருந்தது. கடவுளிடம் முறையிட கடவுள் சொன்னார், ‘உனக்கு ஒரு கண்ணில் பார்வை நன்றாயிருக்கிறதே. ஆகவே தான் அந்தம்மாவுக்கு இரு கண்களும் நன்றாயிருக்கிறது’ என்றாராம்.
தான் மட்டும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் கர்த்தரின் கரத்தலிருந்து நான் மட்டும் நன்மை பெறவேண்டும். ஆனால் பிறர் ஆசீர்வதிக்கப்பட்டாலோ அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. எரிச்சலும் கோபமும் வந்து முகம் வாடிப் போகிறதே.
நண்பர்களே! நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உயர்த்தப்படும் பொழுது மகிழ்ச்சியடைய வேண்டும். பொறாமையோ, இருதயம் வேறுபட கூடாது. இருதயம் வேறுபடும் போது கோபம், எரிச்சல், பொறமை, பொய், இரக்கமின்மை, சதித்திட்டம், கொலை என பாவப்பட்டியல் நீளும். மறுரூபம் அடைய வேண்டிய நம் இருதயம் வேறுபடலாமா? மனந்திரும்புவோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE