அரண்மனை தர்பாரைக் கூட்டுங்கள்

ராஜா அவரசம் அவசரமாக அரண்மனை தர்பாருக்கு காலை வேளையில் வந்தார். மந்திரிகளையும் படைத் தளபதிகளையும் மற்றும் மக்களையும் அரச மண்டபத்திற்கு உடனடியாக வந்து சேரும்படியாக உத்தரவிட்டார். அனைவரும் பதைபதைப்போடு அரசமண்டபத்தில் கூடினர். ராஜா சிங்காசனத்தில் அமர்ந்து
“இந்த காலை வேளையில் ஏன் இந்த அவசரக் கூட்டத்தை கூடடினேன் தெரியுமா” என்று வினவினார். அனைவரும் முழித்தனர். மன்னர் தொடர்ந்தார். “நேற்று இரவு என் படுக்கை அறையில் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவன் உள்ளே நுழைந்து என் மார்பில் ஏறி எட்டி உதைத்தான். அவனுக்கு என்ன தண்டனை தர வேண்டும் முடிவு செய்யுங்கள்” என்றார். சேனாதிபதி எழுந்து அவன் காலை வெட்டிவிட வேன்டும் என்றார். இன்னொரு தளபதி எழுந்து அஜாக்கிரதையாய் இருந்த மெய்காப்பாளர்களை தூக்கிலிட வேண்டும் என்றார். இப்படியாக ஆளுக்கு ஒரு கருத்தும், தண்டனையும் வழங்கினர். மத்திய மந்திரி எழுந்தார். “மன்னனின் மார்பில் உதைத்த அந்த கால்களுக்கு தங்க கொலுசு போட வேண்டும்” என்றார். அரசவை சலசலத்தது. மந்திரி தொடர்ந்தார். இவ்வளவு பாதுகாப்பான அரண்மனைக்குள் அந்நியன் யாரும் நுழைய முடியாது. அதுவும் மன்னரின் படுக்கை அறைக்குள் அவரது குடும்பத்தை தவிர யாரும் செல்லவே அனுமதியில்லை. ஆகவே, படுக்கை அறைக்குள் நுழைந்து மன்னரின் கட்டில் ஏறி மார்பில் எட்டி உதைத்தது. மன்னரின் பேரக் குழந்தையாகத்தான் இருக்க முடியும். அதனால் தண்டனை வேண்டாம். பரிசு வழங்குங்கள் என்றார். மன்னர் மந்திரியின் அறிவை பாராட்டினார்.

இயேசு கிறிஸ்துவும் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். எத்தனை முறை நம்முடைய பாவமான செயல்களால் தேவனை எட்டி உதைக்கிறோம். எட்டி உதைத்தாலும் கட்டி அணைக்கிற தேவனாயிருக்கிறார். சிறு குழந்தைகள் போல் தோளில் தூக்கி சுமக்கிறார். மார்பில் அணைத்துக் கொள்கிறார். முடிவிலே நமக்கு நித்திய ஜீவ கிரிடத்தையும் பரிசாகத் தருகிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE