தாயின் பென்ஷன்

அந்த தாய்க்கு அவன் ஒரே மகன். தந்தை இல்லாத நிலையிலும் மகனைப் படிக்க வைத்து உயர்ந்த நிலையில் வைத்தாள் தாய். வசதி வந்தது, பெரிய இடத்து சம்பந்தம், நாட்கள் சென்றது. தாயா தாரமா போட்டி தோன்றியது, தாரமே வென்றாள். ஆளாக்கிய தாயை மறந்தான். தாய் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டாள்.

பல வருடங்கள் உருண்டோடியது. இல்லத்தின் அலுவலர் மகனின் விலாசம் தேடி வந்து ஒரு கவரை நீட்டினார். அன்பு மகனே என் மரணத்தின் நாள் நெருங்கிவிட்டது. என் பென்ஷன் தொகையில் ஒரு பகுதியை உன் பெயரில் இந்த முதியோர் இல்லத்தில் பதிவு செய்துள்ளேன். காரணம் நாளை உன் பிள்ளை உன்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு பணம் கட்டாமல் இருந்துவிடக் கூடாதே? கடிதத்தின் இவ்வரிகளைப் படித்ததும் மகனின் உள்ளம் உடைந்தது. தாய்பாசம் பெருகெடுத்தது. தாயை பார்க்க ஓடினான்,…. தாய் மரித்து சில வினாடிதான் ஆயிருந்தது.

தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேதம் வலியுறுத்துகிறது, உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, நீ நன்பறாயிருப்பதற்கும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக, (உபா. 5:16) காண்கிறபெற்றோருக்கு கனம் செலுத்த முடியவில்லையென்றால், நீ காணாத ஆனால் உன்னைக் காண்கிற தேவனை எப்படி கனம் பண்ணுவாய்?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE