அம்மையர் கார்மைக்கேலின் ஜெபம்

திருநெல்வேலியிலுள்ள டோனாவூரில் தங்கி, ஊழியஞ்செய்த அருமை மிஷனெரி தாயார் கார்மைக்கேல் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அவர்கள் சிறுவயதாயிருந்தபோது, தன் கண்கள் தன் தாயின் கண்களைப்போல, அழகிய நீல நிறக்கண்களாய் இல்லையே என்ற கவலை அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்டது. சிறுமியான கார்மைக்கேல், ஜெபத்தில் மூலம், தன் கறுப்பு விழிகளை, நீலநிறமாய் மாற்றமுடியும் என்ற எண்ணத்தோடு முழு இரவும் தொடர்ந்து ஜெபிக்கலானாள். அதிகாலையில் ஓடிப்போய் கண்ணாடி முன் நின்றதும், பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. கண்கள் நீலநிறமாய் மாறாமில்லை. அடுத்த நாள், அதற்கடுத்த நாள் நீலநிறக்கண்கள் வேண்டுமென போராடி ஜெபித்தாள், கண்ணாடி முன் நின்று துக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த அவளோடு கர்த்தர் அன்பாக, ” வேண்டாம் மகளே” என்று பேசினார்.
வருடங்கள் கடந்தான கார்மைக்கேல் மிஷனெரியாக இந்தியா வந்த போது இந்திய சிறுமிகள், பெண்கள் கண்களெல்லாம் கறுப்பாக இருந்தைக் கண்டார்கள். அவர்களுக்கு ஒரே ஆனந்தம். சிறு வயதில் தேவன் தன் ஜெபத்திற்கு பதில் அளிக்காததின் இரகசியத்தை அறிந்து கொண்டார்கள்.
தேவன் ஜெபத்திற்கு பதில் தரவில்லை என்றாலோ, அல்லது தாமதமானலோ, அதில் தேவனுடைய அநாதி தீர்மானமும், பிற்காலத்தில் உங்களுக்கு அனுகூலமான ஆசீர்வாதமும் அமைந்திருக்கும் என்பதை தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் மறந்து போகாதேயுங்கள்.

” கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் உள்ளவராயிருக்கிறாரே” (யாக் 5:11).

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE