பிரயோஜனமென்ன?

“ஒருவன் தனக்கு விசுவாசமுண்டு என்று சொல்லியும், கிரியைகள் இல்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” (யாத். 2:14),
    ஒரு ஊழியர் தனக்கு மிகப்பெரிய விசுவாசம் இருக்கிறதென்று மிகவும் பெருமையாய்த் சொல்லிக் கொள்வார். மற்றவர்களையெல்லாம் பழித்துப் பேசுவார். ஆனாலும் தன் விசுவாசத்தை அவர் செயலில் காண்பித்ததில்லை.
    ஒருமுறை, அவர் ஒரு உயர்ந்த மலைமேல் ஏறிச் சென்றபோது கால் தவறி சறுக்கினார். எனினும் ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். கீழே பார்த்தால் ஆழமான பாதாளம். மரக்கிளையில் ஏறவும் முடியவில்லை. எவ்வளவு நேரம் தொங்கிக் கொண்டிருப்பது?
    “”ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்” என்று கதறினார். உதவிக்கோ யாருமில்லை. மீண்டும் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். கர்த்தர் மெல்லிய குரலில் “”மகனே நீ தொங்கிக் கொண்டிருக்கிற அந்த கிளையிலிருந்து உன் கையை விட்டு விடு” என்றார்.
     ஆனால் அவருக்கோ பயம், எப்படி ஆண்டவரே, கீழே விழுந்து நொறுங்கி விடுவேனே” என்று மீண்டும் ஜெபித்தார். கர்த்தர் சென்னார், நீ என்னை விசுவாசித்து  உன் கையை விடு என்று.
     அவருக்கோ கிரியையுள்ள விசுவாசமில்லை. திடீரென்று அவர் தொங்கிய கிளை முறிந்து கீழே கிளையோடு விழுந்தார். என்ன ஆச்சரியம், கீழே சில நாட்களுக்கு முன்னே சினிமாக்காரர்கள் படம் எடுக்கக் கட்டியிருந்த பெரிய வலையில் விழுந்து எந்த சேதமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டார். ஆண்டவரே, இனி செயல் முறையில் உம்மை விசுவாசிப்பேன் என்றுச் சொல்லி துதித்தார்.
     “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1).
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE