வீணை வித்வானும்.. கடம் வித்துவான்..

ஓர் ஊரில் சிறந்த ஒரு வீணை வித்வானும், சிறந்த ஒரு கடவித்வானும், இருந்தனர். இருவரும் விரோதிகளாக இருந்தனர். ஒருவர் போகும் கச்சேரிக்கு மற்றவர் போவதில்லை. ஒரு பெரிய பணக்காரர் தன் மகள் திருமணத்துக்கு எப்படியும் இந்த இரண்டு சிறந்த வித்வான்களும் கலந்து கொள்ளும் கச்சேரியை நடத்த வேண்டும் என்று எண்ணி ஒருவருக்கு தெரியமால் மற்றவரை அழைத்து இருவரையும் வெவ்வெறு வீட்டில் தங்க வைத்து இருந்தார். இது எப்படியோ கல்யாணத்துக்கு சற்றுநேரம் முன்பு அந்த இரண்டு வித்வான்களுக்கும் தெரிந்துவிட்டது. எனவே இரண்டு வித்வான்களும் மற்ற வித்வானை எப்படி தவிர்ப்பது என்று யோசித்தனர். வீணை வித்வான் பணக்காரனை அழைத்து, கடம் வித்துவான் எத்தணை கடம் கொண்டு வந்துள்ளான் என்று கேட்க பணக்காரன் இரண்டு கடன் என்றான். சுபகாரியம் நடக்கும் மேடையில் பானை உடைந்தால் நன்றாக இருக்குமோ யோசித்துப்பாரும் என்று பணக்காரனிடம் சொன்னான் வீணை வித்துவான்.
பின்பு பணக்காரன் கடம் வித்துவானிடம் போய் கச்சேரியில் கடம் வேண்டாம் என்று சொல்லி பேசிய பணமும் கொடுத்து என்ன நிலமை என்றும் சொன்னான். அதற்கு கடம் வித்துவான் நல்லது, ஆனால் ஒன்று வீணை வித்துவான் ஆள் உயர வீணை வைத்துள்ளான். கச்சேரி நடக்கும் முன் வீணையை துணியால் மூடி நான்கு பேர் நான்கு பக்கமும் பிடித்துக்கொண்டு வந்து மேடையில் வைப்பார்கள். சுப காரியம் நடைபெறும் இடத்தில் அது எப்படி இருக்கும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள் என்றான். இரண்டு கச்சேரிகளும் வேண்டாம் என்று பணக்காரன் இருவரையும் அனுப்பிவிட்டான்.
அநேகர் இன்று இப்படித்தான். அடுத்தவரை முன்னேறவோ, மேல்நிலைக்கு வரவோ தடையாக எதையாவது செய்கின்றனர். நாம் அப்படிப்பட்டவர்களாக இருக்ககூடாது. கிறிஸ்துவின் பெயரை வைத்துக்கொண்டு சாத்தானின் செயலை செய்யலாமா? ஆகவே பிறருக்கு பயன் உண்டாகும் காரியங்களையே சிந்தித்து செய்ல படுத்துவதே நமது நோக்கமாக இருப்பதாக.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE