நான் சங்கீதம் 121:4 ஐ வாசித்தேன்

உலக மகாயுத்தம் நடந்து கொண்டு இருந்த வேளையில் ஒவ்வொரு இரவும் லண்டன் மாநகரின் மேல் குண்டுகள் அளவில்லாமல் வீசப்பட்டன. அபாயச் சங்குகள் ஒலிக்கும் போது அந்த தேசத்தின் குடிமக்கள் யாவரும் பயந்து ஓடிப்போய் பதுங்கும் குழியிலே போய் ஒளிந்து கொள்வார்களாம். இரவெல்லாம் அந்தக் குண்டுகள் தங்கள் மேல் விழுந்துவிடுமோ என்று பயந்து நடுங்கி யாவரும் தூங்கமாட்டார்களாம். ஆனால் அங்கே ஒருவர் மாத்திரம் நிம்மதியாய் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாராம். மற்றவர்கள் அவரைப் பார்த்து, இப்படிக் குண்டு வீசிக்கொண்டிருக்கிற பயங்கரமான சூழ்நிலையில் உன்னால் எப்படி நிம்மதியாய்த் தூங்க முடிகிறது? கவலையில்லாமல் படுத்து சமாதானமாய்த் தூங்குகிறாயே. இது எப்படி? என்று கெட்டார்களாம். அவரோ, “நான் சங்கீதம் 121:4 ஐ வாசித்தேன்’. “இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் தான் உறங்காமல் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாரே.’ அவர் விழித்துக் கொண்டு இருக்கும் போது நான் பயப்பட அவசியமேயில்லை. ஆகவே பாரத்தை எல்லாம் அவர் மேல் வைத்துவிட்டு நிம்மதியாய் தூங்கிவிட்டேன்” என்றாராம்.
      உங்களைக் காக்கிறவர் உறங்கார். அவர் இரவும் பகலும் உங்கள் மேல் நோக்கமாயிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் பாரங்களைக் குறித்து அன்போடு நம்மிடம் விசாரித்து, அவைகளைத் தன்மேல் போட்டுக் கொள்ள, சுமக்க தயாராயிருக்கும் அவரின் அன்பினை புரிந்து கொள்ளுங்கள். அவர் கரிசனையோடு நம்மையே சுற்றி வருபவர். மிகப்பெரிய சுமை தாங்கி என்று கூட சொல்லலாம். நம் கவலை, பாரங்களை, கண்ணீர்களைச் சுமக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார். தாவீது “கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8) என்று சொல்கிறார். ஆம் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்ல தேவன் தான் உங்களை விசாரிக்கிறவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE