சங் 46:10 ஞாபகத்தில் வந்தது..!

இங்கிலாந்து தேசத்திலே ஒரு பெண், அனாதைப் பிள்ளைகளுக்குப் பள்ளிகட்ட இடம் கேட்டு கவர்னரிடம் மனு கொடுத்தாள். கவர்னரோ ஏளனமாய் மலைப்பகுதி ஒன்றைக் கொடுத்துவிட்டு “மலையைப் பெயர்த்து சமமாக்கி பள்ளி கட்டவும்” என்று ஒரு குறிப்பையும் கொடுத்துவிட்டு போய்விட்டார். இந்த அம்மா இப்பொழுது என்ன செய்ய? என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் விழித்து நின்றார்கள், திடீரென்று சங் 46:10 அவர்களுக்கு ஞாபகத்தில் வந்தது. உடனே இந்த வசனத்திற்குக் கீழ்ப்படிய தன்னை ஒப்புக்கொடுத்தார்கள். ஆண்டவரே நான் அமைதியாய் உமது பாதத்தில் காத்திருக்க விரும்புகிறேன். நீர்பொறுப்பெடுத்துக்கொள்ளும். இப்பொழுது நான் செய்ய வேண்டியை நீர் எனக்குக் கற்றுத்தாரும் என்று ஜெபித்தார்கள். ஒரு நாள் ஒரு காண்டிராக்ட்டர் இந்த அம்மாவைப் பார்க்கும்படி வந்தார். அவர் சொன்னார், அம்மா கடலில் பாலம் போட எனக்கு நிறைய கற்கல் தேவை. இந்த மலையில் உள்ள கற்களை எங்களுக்குத் தரும்படி அனுமதி வேண்டும்” என்றார். இந்த அம்மாவும் அதற்காகத்தானே காத்திருந்தார்கள். சரி என்று சொன்னார்கள், உடனே அந்த மனிதன் அதற்குரிய விலையாக ஒரு மிகப் பெரிய தொகையை அந்தம்மாவின் கரங்களிலே வைத்துவிட்டுச் சென்றாராம். அது அவர்கள் அந்த இடத்தில் கட்டிடம் எழுப்பவும் உதவி செய்யக்கூடிய தொகையாயிருந்தது. அந்த அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். கர்த்தரின் செயல்களை நினைத்து நினைத்து துதித்தார்களாம்.

நண்பர்களே! தீர்மானம் எடுக்க முடியாமல் உங்களை கலங்கச் செய்யும் எந்த சூழ்நிலையையும் உங்களுக்கு சாதகமாய் மாற்றி அவர் தேவனென்று நிரூபிப்பார். அல்லேலூயா.

” நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்”. சங் 46:10

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE