ஒரு போர்க்கப்பல் விபத்தில் சிக்கியாது. கப்பல் கேப்டனின் மனைவி, அமைதியாயிருந்த கேப்டனை நோக்கி “நானும், நீரும், பிள்ளைகளும் புயலினால் அழியப்போகிறோம், நாம் பிழைக்கு ஏதாவது வழிசெய்யும்” என்று ஓலமிட்டாள்.
கேப்டன் முறைத்துப் பார்த்த வண்ணம், ஒரு கூரிய கத்தியைத் தன் மனைவியின் நெஞ்சிற்கு நேரே கொண்டுவந்தான். ஆனாலும் அவள் கலங்கவில்லை. “உனக்கு பயமா இல்லையா” ? என்று கப்பல் தலைவன் கேட்டபோது, “கூரிய கத்தியானாலும் அது என் அன்பு நேசரின் கரத்திலல்லவா இருக்கிறது”. ஆதலால் பயப்ப்டமாட்டேன் என்றாள்.
அப்பொழுது கேப்டன், “கொடிய புயலும் அலையுமாக இருந்தாலும் அது என் நேசரின் கரத்திலல்லவா இருக்கிறது”. ஆகையால் பயப்படமாட்டேன் என்று பதிலளித்தால்.உங்கள் வாழ்வில் புயல் எழுந்தால் அதற்கு எதிராய் இயேசுவும் எழுவார்: