தேவ பலத்தின் ரகசியம்

உலக வரைப்படத்தில் இஸ்ரவேல் நாடு என்பது ஒரு சிறு புள்ளிதான். ஆனால் உலக நாடுகள் வியக்கும் வண்ணமாக அது தொடர்ந்து வல்லமை மிக்கதாகவும் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து எழுச்சியுடன் நிற்கின்றதாகவும் விளங்குகிறது. இந்த வலிமையின் பின்னணிக்கு முக்கியமான சில காரணங்களில் ஒன்று பாதுகாப்பற்ற பயங்கரமான ஆபத்துகள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்கின்றோம் என்ற அந்த நாட்டின் விழிப்புணர்வுதான். எதிரிகளால் சூழப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றோம், எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளும் ஆயத்த நிலையில் இருப்பதிலும் விழிப்பாயிருக்கிறது.

பிரச்சனைகளற்ற ஒரு சுமுகமான சூழ்நிலை மனிதனை எப்போதுமே பலவீனப்படுத்தித், தோல்வியை நோக்கி விரைவுபடுத்தும் தன்மையுடையது. நம்முடைய வாழ்க்கை கட்டுகோப்பானதாகவும், வலிமையுடையதாகவும் இருப்பதற்கு எதிர்மறையான சூழ்நிலைகளும் அவசியம் என்பதே உண்மை. எதிர்ப்புகளற்ற சூழ்நிலையில் சுமுகமாக இருக்க நேர்ந்த எந்த ஒரு நாடும் எழுச்சியடைந்ததில்லை என்பதே சரித்திர உண்மை.

சாலொமோன் ராஜா பிற ராஜக்களைப் போல பலவித எதிர்ப்புகளின் நடுவில் வாழவில்லை. அவனுடைய நாட்களில் அமைதியான சூழ்நிலை இருந்தது. ஆனால் அதுவே சாலொமோனின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. அவன் சுகமான சூழ்நிலைகளில் தன்னை சுகப்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்தான். தேவனை நம்பிச் சார்ந்து வாழவேண்டிய கட்டாயங்கள் குறைவாக இருந்ததால் தன் சுயமதியால் தன்னை அவன் பலவீனப்படுத்திக் கொண்டான். ஆனால் தாவீது எந்த அளவிற்குச் சோதனைகளால் குழப்பட்டிருந்தானோ, அந்த அளவிற்கு அவன் பலத்தின் மேல் பலமடைகிறவனாகவும் மாறினான். சோதனைகளின் பெருக்கம் தேவ உறவின் நிலையையும் பெருகச்செய்து, அவனை மிகுந்த பலமுடையவனாக மாற்றியது.

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் சில சோதனைகளையும், போராட்டங்களையும் அனுமதிக்கிறாரென்றால் அவைகள் மூலம் நம்மைப் பலப்படுத்தத் தானேயன்றி, நம்மை பலவீனப்படுத்த அல்ல, சில எதிர்மாறான காற்றுகள் நமக்கு எதிராக வீசுகின்றபோதுதான் தேவபலத்தை அதிகமாகத் தேடி, நம்மை பலப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வை நாம் அடைய முடியும். அப்பொழுது தான் நம்முடைய இறை நம்பிக்கை, விசுவாசம், தேவ ஐக்கியம், ஜெபம், ஆகியவை வலுவடைந்து எந்தச் சுழ்நிலையையும் தைரியமாகச் சந்திக்கத்தக்க ஆயத்தத்தோடு செயல்பட முடிகின்றது.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE