தைரியம் இருந்தால் சுடு

இங்கிலாந்து ஒரு மகாப்பெரிய வல்லரசாக உலகத்தை ஆளுகிற நாடாக இருந்தகாலத்தில் ஆப்பிரிக்க தேசத்தில் குற்றம்செய்த ஆங்கிலேயன் ஒருவனைச்சுட்டு கொலை செய்யும்படி court உத்தரவிட்டது. அப்பொழுது இங்கிலாந்து தேசத்து பிரதிநிதி எவ்வளவோ வாதாடினார். ஆப்பிரிக்க கமிஷனர் பிரதிநிதியின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கவில்லை. கடைசியாக சுடுபவர் ஆயத்தமாக நிற்கிறார். கொலை செய்யப்பட வேண்டியவனுடைய கண்களைக் கட்டி முன்னால் நிறுத்தி இருக்கிறார்கள்.
   சுடும்படி கமிஷனர் உத்தரவிட்டார். அந்த கணப்பொழுதில் கொலை செய்யப்படவேண்டியவனுடைய சரீரம் முழுவதையும் இங்கிலாந்து  தேசத்துகொடியால்  இங்கிலாந்து தேசத்து பிரதிநிதி மூடினார்.
   இங்கிலாந்து தேசத்து பிரதிநிதி இப்போழுது தைரியம் இருந்தால் சுடுங்கள்! (FIRE IF YOU CAN) என்றார். சுடமுடியாது! காரணம் குற்றவாளியைச் சூழ்ந்திருப்பது இங்கிலாந்து தேசத்தின்கொடி. குண்டு பாய்ந்தால் கொடியை துளைத்துவிடும். அப்படி செய்தால் இங்கிலாந்து நாட்டிற்கு நேராக குண்டு துளைத்ததாகிவிடும். எனவே அவரால் சுடமுடியவில்லை. வார்த்தை செய்யாததை செயல் செய்தது.
   ஆம் ! நாமும் ஆண்டவரை அண்டிக்கொள்ளும்போது நாம் அணிந்திருக்கும் பாவகறைகள் நிரம்பிய அழுக்கு வஸ்திரத்தை நம்மைவிட்டு மாற்றி தம்முடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்த அழகிய வஸ்திரத்தைக் கொண்டு நம்மை கர்த்தர் மூடிப்போடுகிறார். ஒரு சத்துருவும் நமக்கு தீங்கு செய்யமுடியாது. (சகரியா 3:1-9)-ல் பிரதான ஆசாரியனான யோசுவாவின் அக்கிரமம் நிரம்பிய அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துப்போட்டு சிறந்த வஸ்திரங்களைத் கர்த்தருடைய தூதன் தரிப்பித்தார். சிரசின்மேல் சுத்தமான பாதையை வைத்து, கர்த்தருடைய ஆலயத்தில் நியாயம் விசாரிக்கும்படியாக கர்த்தர் செய்தார். அப்படியே நமக்கும் செய்வார்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE