யானை அழுத கதை

 காட்டில் வாழ்ந்த யானை தினமும் அழுது அழுது துரும்பாய் போய்விட்டது. காரணத்தை அறிவதற்காக காட்டில் வாழும் மற்ற மிருகங்கள் பறவைகள் யாவும் அந்த யானை அருகே வந்தன. அண்ணே! உங்க அழுகைக்குக் காரணமென்ன, ஏதாவது சுகர் கம்ப்ளெயின்ட்டா அல்லது யானைக்கால் வியாதியா? பேச்சை ஆரம்பித்தது நரி, எனக்கு உருவம் தான் பெரிசு. உன்னைப்போல் எனக்கு மூளை இருக்கா- நொந்து கொண்டது யானை. ஆறுதலா மான் பேச ஆரம்பித்தது. இந்தப் பாருங்கள் உடம்பை வைத்துக் கொண்டு உன்னைப்போல் துள்ளி துள்ளி ஓடமுடியவில்லையே. அதனால்தான் என் உடல் பருமனை நினைத்து நினைத்து அழுகிறேன். முயல் மெல்லப் பேச்சுக் கொடுத்து, அடபோப்பா! உன் உடம்பு எவ்வளவு அழகா வெள்ளைவெளேர் கலர்ல இருக்கு. என் கலரைப் பார் காய்ந்து போன சாக்கடை கறுப்பு கலராக அல்லவா இருக்கிறது. இப்படியாக காரணம் அறிய வந்த ஒவ்வொரு மிருகங்களின் சிறப்பம்சம் தனக்கில்லையே என்று யானை நொந்து கொண்டது. காரணத்தை அறிந்து கொண்ட அணில் யானையைப் பார்த்து சொன்னது. அண்ணே, எங்ககிட்ட இல்லாத பலம் உங்ககிட்ட இருக்கே!  உங்க பலம் தெரியாமலே அழுது அழுது தேய்ஞ்சு போயிட்டிங்களே. அதற்குப் பிறகுதான் யானைக்குத் தன் பெலன் தெரிந்தது.
  என் நண்பனே! உன் பலம் தெரியாமல் அழுது அழுது தேய்ந்து போனாய், உனக்குள் இருப்பவர் பெரியவர், அவர் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். பராக்கிரமமுடையவர். சம்பூரண ஞானம் நிறைந்தவர். ஐஸ்வரிய சம்பன்னர். சர்வ வல்லமை உள்ளவர். சேனைகளின் தேவன்,
யானையின் பெலன் தும்பிக்கையிலே! விசுவாசியே உன் பெலன் நம்பிக்கையிலே!!
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE